தமிழ்நாடு

tamil nadu

பிபியால் அவதிப்படுகிறீர்களா? செம்பருத்தி "டீ" குடித்தால் போதும் பிராப்ளம் சால்வ்..ஆய்வு கூறுவது என்ன? - HERBAL TEA CONTROLS BLOOD PRESSURE

By ETV Bharat Health Team

Published : Sep 12, 2024, 4:26 PM IST

HERBAL TEA CONTROLS BLOOD PRESSURE : நீங்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இந்த மூலிகை டீ-ஐ குடித்தால் உடனே பிபி கட்டுப்படும் என்கிறது ஆய்வு..தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்..!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

ஹைதராபாத்: மாறிவிட்ட வாழ்க்கை முறை காரணமாக பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது உயர் ரத்த அழுத்தம் (Blood Pressure). இந்த வரிசையில், பிபியை கட்டுக்குள் வைத்திருக்க தினசரி மருந்துகளை உட்கொள்வது, உப்பு அளவை குறைப்பது என பலரும் கட்டுக்கோப்பாக இருக்கின்றனர். இருப்பினும், பலர் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஹெர்பல் டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

செம்பருத்தி டீ: செம்பருத்திப் பூக்களை வைத்து தயாரிக்கப்படும் டீயைக் குடிப்பதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 2010ல் மனித உயர் இரத்த அழுத்தம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்சிகன் ஆராய்ச்சியாளர்கள் ஏ. ஹெர்ரெரா-அரெல்லானோ,ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா சாறு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

செம்பருத்தி தேநீரின் பண்புகள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

துளசி டீ: ஆயுர்வேதத்தில் துளசி முக்கியமான மருத்துவ தாவரமாக கருதப்படுகிறது. இந்த துளசி டீயை குடிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக, இந்த தேநீர் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

சோம்பு தேநீர்: இது சோம்புவை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து டீ தூள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

கெமோமில்(Chamomile) டீ: இந்த தேநீர் கெமோமில் இனத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கெமோமில் டீயை குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இஞ்சி டீ: நாம் வழக்கமாக குடிக்கும் இஞ்சி டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதை குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று கூறப்படுகிறது.

அர்ஜுனா மரப்பட்டை டீ: அர்ஜுனா மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் டீயை குடிப்பதாலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

புதினா டீ: புதினா டீ குடிப்பது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சி தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

"மசாலா டீ" இப்படி தயாரிச்சு ட்ரை பண்ணி பாருங்க.!

இலவங்கப்பட்டை டீ: இலவங்கப்பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் டீயைக் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

தேன் மற்றும் லெமன் டீ: லெமன் டீயில் தேன் கலந்து குடிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பிபியை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details