தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

புற்றுநோய், சர்க்கரை நோய் வராமல் இருக்க பெஸ்ட் சாய்ஸ்.. பழுப்பு அரசியில் இப்படிப்பட்ட நன்மைகளா? - Goodness Buried In Brown Rice - GOODNESS BURIED IN BROWN RICE

Goodness Buried In Brown Rice: தினமும் பழுப்பு அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை, இதய நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் அஞ்சலி தேவி கூறியுள்ளார்.

பழுப்பு அரிசி (கோப்புப்படம்)
பழுப்பு அரிசி (Credits- Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 4:53 PM IST

சென்னை:இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம், வெள்ளை மற்றும் மெல்லிய தோற்றம் உடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அந்த காலத்தில் இருந்த அரிசி குறித்து ஆராய்ந்து பார்த்தால், தற்போது இருப்பது போல பாலிஷுடு அல்லது பளீச் தோற்றம் இல்லாமல், சற்று கருமை நிறமானதாக இருப்பதை காணலாம். இவ்வாறான அரிசியின் நன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா? நாம் அன்றாடம் உண்டு வரும் வெள்ளை அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

இவை சாதாரணமாக நெற்பயிரில் இருக்கும் உமியை நீக்கிய பின் வெளிவரும் நெல்மணிகளாகும். இவற்றை பான்கேக் அரிசி என்றும் அழைக்கின்றனர். ஆனால், பிரவுன் ரைஸ் எனப்படும் பழுப்பு அரிசி பல வகை நோய்களுக்கு அருமருந்தாய், ஆரோக்கியமாக இருப்பது குறித்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? இந்த பழுப்பு அரிசி குறித்த விரிவான நன்மைகளை, பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி தேவி கூறுவதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை:இந்த பழுப்பு அரிசியில் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது. நெல் உமியின் கீழ் இருக்கும் தோலில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. எனவே, இந்த அரிசியை பெரும்பாலும் பாலிஷ் செய்ய மாட்டார்கள். காரணம், இந்த சத்துக்களும் நெல்மணியில் இருந்து அகற்றப்படும் என நிபுணர் கூறுகிறார்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்: தற்போது பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், தினமும் இந்த பழுப்பு அரிசியினால் செய்யப்பட்ட சாதம் சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதற்கு காரணம், இந்த வகை அரிசியில் சர்க்கரை குறியீடு அளவை குறைக்கிறது. மேலும், இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவித்த அரிசியில் கொழுக்கட்டை சாப்பிட நல்லது என நிபுணர் அறிவுறுத்துகிறார்.

ஆராய்ச்சியும், பழுப்பு அரிசியும்:இந்த வகையான சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை வெள்ளை அரிசியை உட்கொள்வது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. அதை தவிர்க்க, ஒருவர் சாப்பிடும் வெள்ளை சாதத்தின் அளவில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 கிராம் குறைத்து, அதில் பழுப்பு அரிசியை உட்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படும் பாதிப்பை 16 சதவீதம் குறைக்கிறது என கண்டறிந்துள்ளனர்.

இதய ஆரோக்கியம்:இந்த பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய், பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம் என நிபுணர் கூறுகிறார்.

செரிமான மேம்பாடு:இந்த அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இந்த சாதத்தை சாப்பிடும் போது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள், அதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதை குறைக்கலாம் என நிபுணர் கூறுகிறார்.

புற்றுநோயை தடுக்கிறது: இந்த அரிசியில் செலினியம் நிறைந்துள்ளது, இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுவதோடு, தளர்வான செல்களுக்கும், தசைகளுக்கும் பலம் அளிக்கிறது. மேலும், இதில் இருக்கும் லிக்னான்கள் மற்றும் பாலிபினால்கள் குடலில் நுழையும் போது, பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்டோரோலாக்டனாக மாற்றப்படுகின்றன. இதனால் புற்றுநோய், இதய நோய் ஏற்படுவதில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது என நிபுணர் கூறுகிறார்.

டயட்:உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் இந்த அரிசியினால் ஆன சாதம் சாப்பிட்டு,வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என நிபுணர் அறிவுறுத்துகிறார். மேலும், இந்த அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. அதனால் இவற்றை சாப்பிடுவது மூலம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். இந்த சாதம் சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு, விரைவில் பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்வதால் இது ஒரு சிறந்த டயட் உணவு என மருத்துவர் அஞ்சலி தேவி கூறுகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:உங்களது ஆயுள் கூட வேண்டுமா.. இத மட்டும் ஃபாலோ பண்ணாலே போதும் - WHO-வின் வழிகாட்டுதல்கள்! -

ABOUT THE AUTHOR

...view details