ஹைதராபாத்:உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை சுத்தமாக வைத்திருக்க இயங்கி வருகிறது. ஆனால், சில நேரங்களில் நமது உடலில் ஏற்படும் நச்சுக்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தி முற்றிலுமாக செயலிழக்கச் செய்கிறது.
இந்த சூழலில், பெர்ரி, ஆப்பிள் மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசிய நிறுவனத்தலால் (NIDDK) வெளியிடப்பட்ட சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு உரிமை ஆய்வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சீறுநீரகத்தை காக்கும் பழங்கள் என்னென்ன? அதில் உள்ள நண்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
கிரான்பெர்ரி (Cranberry): குருதிநெல்லி என அழைக்கப்படும் கிரான்பெர்ரி பழங்களில் புரோந்தோசயனிடின்கள் போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை, சிறுநீர் பாதையின் சுவர்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்க உதவுகிறது. இவை ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன.
எலுமிச்சை:சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை பழம் சிறுநீரக கற்களை கரைக்கிறது. தினசரி ஒரு கிளாஸ் எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால், சிறுநீர் சிட்ரேட் அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. மேலும், சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.