ஹைதராபாத்: ஹார்ட் அட்டக் எனப்படும் மாரடைப்பு, தற்போது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏற்படுகிறது. மாரடைப்பு திடீரென ஏற்பட்டு ஒருவரைத் தீவிரமான நிலைக்குத் தள்ளுகிறது என்று பலரும் நம்புகிறோம். ஆனால், உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதனை சரியாக கவனித்தால் மாரடைப்பைத் தவிர்த்து உயிரை காப்பாற்றலாம் என்கின்றனர். அப்படி, மாரடைப்புக்கு முன் உடலில் ஏற்படும் 6 முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சோர்வு:மாரடைப்பு வருவதற்கு 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை உடல் சோர்வாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவானது என 2019ம் ஆண்டில் வெளியான தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்தக் கழகத்தின் இதழில் குறிப்பிட்டுள்ளது.
மார்ப்பு அசெளகரியம்:மாரடைப்புக்கு முன் மார்பைச் சுற்றி அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. மார்பு இறுக்கமாக, கனமாக உணர்தல், மார்பின் நடுவில் வலி ஏற்படுவது மாரடைப்பிற்கான அறிகுறிகளாக இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வியர்த்தல்: உடலில் வியர்வை ஏற்படுவது சாதரணமாக ஒன்று தான். ஆனால், மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு முதலில் அதிக வியர்வை ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருக்கும் போது உடலில் அதிகளவு வியர்ப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். கூடுதலாக, சிலர் அஜீரணம் அல்லது குமட்டல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.