தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

படிக்கட்டு ஏறுதல் Vs நடைப்பயிற்சி..ஃபிட்டாக இருக்க எது சிறந்தது? - WALKING VS CLIMBING STAIRS

படிக்கட்டு ஏறுவது, நடப்பதை விட மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிப்பதாக ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷ்ங் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Health Team

Published : Dec 5, 2024, 5:16 PM IST

படிக்கட்டு ஏறுதல்:படிக்கட்டு ஏறுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு தீவிரமான உடற்பயிற்சியாகும். படிக்கட்டு ஏறும் போது, கால்கள் மற்றும் கோர் பல தசை பகுதிகளை ஈடுபடுத்துகிறது, அதே நேரத்தில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க படிக்கட்டு ஏறுவது உதவுவதாக ஸ்காண்டிநேவியன் ஜர்னல் ஆப் மெடிசின் அண்ட் சயின்ஸ் ஆப் ஸ்போர்ட்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. படிக்கட்டு ஏறுவது தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருதய செயல்பாடு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

படி ஏறுவதால் கிடைக்கும் நன்மைகள்:சமமான மேற்பரப்பில் நடப்பதை விட படிக்கட்டுகளில் ஏறும் போது கலோரிகள் மிக வேகமாக குறையும். படி ஏறுவது, நடப்பதை விட மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிக்கும் என்கிறது, ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷ்ங்.படிக்கட்டு ஏறுவது, இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வாரம் முழுவதும் 30 நிமிடம் படிக்கட்டு ஏறுவது இதயத்தின் செயல்பாட்டையும் நீண்ட ஆயுளையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இடுப்பு, தொடைகள்,அடிவயிறு மற்றும் கால்களில் உள்ள தசைகள் படிக்கட்டு ஏறுவதால் வலுவடையும்.

கோப்புப்படம் (Credit - ETVBharat)

படிக்கட்டு ஏறுவதால் ஏற்படும் தீமைகள்: படிக்கட்டு ஏறுவதில் பல நன்மைகள் இருந்தாலும், அது அனைவருக்கும் பொருந்தாது. உதாரணமாக, இதயப் பிரச்சனைகள் அல்லது மூட்டுக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரை அணுக வேண்டும், ஏனெனில் இது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றும் இருதய அமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கும்.

நடைபயிற்சி:நடைபயிற்சி என்பது அனைவரும் எளிதாக அணுகக்கூடிய உடற்பயிற்சி வடிவங்களில் ஒன்றாகும். இதற்கு சிறப்பு பயிற்சி அல்லது உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது.

நடைப்பயிற்சி நன்மைகள்: நடைபயிற்சி கலோரிகளை எரிக்க உதவுவதோடு கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுவதால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கிறது. இது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நல்ல் கொழுப்பின் அளவை பராமரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்க நடைப்பயிற்சி உதவியாக இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

தீமைகள்: நடைப்பயிற்சி செய்வதில் எந்த தீமைகளும் இல்லை என்றாலும், வயதானவர்கள் நடைப்பயிற்சி செய்ய தொடங்கும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

எது சிறந்தது?: படிக்கட்டு ஏறுதல் கலோரிகளை வேகமாக குறைக்க உதவுவதால், மூட்டு வலி பிரச்சனை இல்லாதவர்களுக்கு, இது ஒரு சிறந்த வொர்க்அவுட்டாக அமைகிறது. மூட்டு வலி பிரச்சனை உள்ளபவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும். படிகட்டு ஏறுதல் மற்றும் நடைபயிற்சி இரண்டும் தனிப்பட்ட நன்மைகளை கொண்டிருப்பதால், உங்கள் வாழ்க்கை முறைக்கு எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க:இரவில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details