சென்னை:பொதுவாகவே உடல்நல பிரச்னைகளுக்கு பரிந்துரைக்கப்படுவது தினசரி நடைபயிற்சி செய்யுங்கள் என்பது தான். உடற்பயிற்சியில் சிறந்தது நடைபயிற்சி என மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், நடப்பதால் ஏற்படும் சிறப்பான பலன்களை லண்டனின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
Weight gain ஹார்மோனை எதிர்க்கிறது: ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் உள்ள 32 வகையான உடல் பருமனை அதிகரிக்கும் மரபனுவை சோதித்துப் பார்த்தனர். அப்போது, தினமும் சுறுசுறுப்பாக நடப்பவர்களிடம் உடல் எடையை அதிகரிக்கும் மரபணுக்கள் குறையத் தொடங்கியதை கண்டறிந்துள்ளனர்.
இனிப்பு வகைகள் மீது ஈடுபாடு இல்லாமல் போவது: மன உளைச்சலில் இருக்கும் போது பலரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவதுண்டு. அப்படியான சூழ்நிலையில், 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் சாக்லேட் மீதான ஈர்ப்பு போய்விடுவதாக எக்ஸிடெர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வாக்கிங் செல்வதால் உணவுப் பொருள் மேல் உள்ள ஆர்வத்தையும், இனிப்பு வகைகள் அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.
மார்பக புற்றுநோயை தடுக்கிறது:எந்தவொரு உடற்பயிற்சியும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வாரத்திற்கு ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நடக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து வாரத்திற்கு மூன்று மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக நடப்பவர்களை விட 14% குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.