சென்னை:காத்திருப்புக்கு பின்னால் இருக்கும் அவஸ்தைகளை அனுபவிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. காதலர்கள் ஒருவரை மற்றொருவர் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது வெய்டிங் கால், வேலைக்கு விண்ணப்பித்து அழைப்பு வராமல் எதிர்பார்த்து இருத்தல், ஆபத்தான நோய் உள்ளதா என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக பார்த்து இருத்தல், இப்படி ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் பல வகையான காத்திருப்புகளை சந்திக்கிறான். இந்த காத்திருப்பு மற்றும் காத்திருப்புக்கு இடைப்பட்ட நேரம் அவனை என்னவாக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்களி ஆய்வு கூற்றுப்படி விளக்கியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் தௌபிக் ரஷீத்
காத்திருப்பு அழகுதான்.. உனக்காக என் வாழ் நாள் முழுவதும் காத்திருப்பேன் என்ற காதல் வசனங்களும், கவிஞர்களின் கவிதை படிவங்களும் ஏராளம் பார்த்திருப்போம். ஆனால் அந்த காத்திருப்பை தத்துவவாதிகள் பலர் அது ஒரு "முடக்க நிலை" என அழுத்திக்கூறியுள்ளதாகவும், இதை தற்போதைய விஞ்ஞான அறிவியல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தௌபிக் ரஷீத் விளக்கியுள்ளார்.
"மூட் டிரிஃப்ட்" (Mood Drift) இந்த வார்த்தையை கேட்டதுண்டா.. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியே இந்த காத்திருப்பு என்ற முடக்க நிலைக்கு பின்னால் இருக்கும் விளக்கம். ஒரு மனிதன் தனக்கு கிடைத்த நேரத்தில் எதை பற்றி யோசிக்கிறான், அவன் ஏதோ ஒன்றுக்காக காத்திருக்கும் நேரத்தில் அவனின் செயல் திறன் என்ன ஆகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில், அவனது மூளையின் ஒரு பகுதி காத்திருப்பு நேரத்தில் செயல் திறன் குறைந்து இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
மன ஆரோக்கியம் மற்றும் மன நலம் இரண்டையும் வேறுபடுத்தி குறிப்பிட்ட இந்தியாவின் தலைசிறந்த மனநல நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜிதேந்திர நாக்பாலின் கருத்தை இதில் தொடர்பு படுத்தியுள்ள பத்திரிக்கையாளர் தௌபிக் ரஷீத், மன ஆரோக்கியம் ஒருவரின் சோகம் மற்றும் மகிழ்ச்சியின் விளைவை மையமாகக் கொண்டுள்ளது எனவும், மனநலம் என்பது ஒருவரின் காத்திருப்பை மையப்படுத்தி இருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
காத்திருப்பு, ஒட்டு மொத்த செயல்பாட்டை குறைக்கலாம், கவலையை மேலும் அதிகரிக்கலாம், மகிழ்ச்சி, சோகம், கோபம் என அனைத்திற்கும் உட்படலாம். இப்படி பல விளைவுகளுக்கு இந்த காத்திருப்பு காரணமாக இருருக்கும் நிலையில், அது உங்களுக்கான ஒரு "முடக்க நிலை" என வரையறுப்பதில் தவறு இல்லை என்பதை உறுதி படுத்துகிறார் பத்திரிக்கையாளர் தௌபிக் ரஷீத்.
சரி இந்த "மூட் டிரிஃப்ட்" -ல் சிக்காமல் அதாவது காத்திருப்பு என்னும் புதை குழியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பட்டியலிட்டுள்ளார் தௌபிக் ரஷீத்.