தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும்? - Dengue fever cautions - DENGUE FEVER CAUTIONS

கோடை மழை பெய்து வரும் நிலையில் நீர் வழி பரவும் டெங்கு நோய் தொற்று பரவும் அபாயம் குறித்தும் அதன் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொற்றுநோய்கள் சிகிச்சை துறையின் மருத்துவ நிபுணர் எம். மாலதி கூறுவதை இத்தொகுப்பில் காணலாம்.

கொசு கடிப்பது மற்றும் டெங்கு இரத்தப் பரிசோதனை கிட் போன்ற கோப்புப்படம்
கொசு கடிப்பது மற்றும் டெங்கு இரத்தப் பரிசோதனை கிட் போன்ற கோப்புப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:01 PM IST

டெங்கு நோய் தொற்று அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர் எம். மாலதி கூறுவது (VIDEO CREDITS-ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலத்தை முன்னிட்டு கடும் வெப்ப அலை வீசி வந்த நிலையில், இந்த ஒரு வாரமாக வெப்பம் குறைந்து மழை பெய்து வரும் சூழலை காண முடிகிறது. இவ்வாறு மழை தொடங்கியுள்ள நிலையில், நாம் அனைவரும் நீர் மூலம் பரவும் நோய் தொற்றான டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஏடிஸ் என்னும் கொசு வகையால் டெங்கு வைரஸ் உருவாகிறது. ஏடிஸ் கொசுவின் உற்பத்தி அதிகமாகும் போது டெங்கு காய்ச்சலின் பரவலும் அதிகமாகும் என்பதால் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிந்து செயல் பட வேண்டும் என்றும் அவ்வாறு செயல் படுவதால் பாதிப்பின் அளவை குறைக்க முடியும் என்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தொற்றுநோய்கள் சிகிச்சை துறையின் மருத்துவ நிபுணர் மருத்துவர் எம். மாலதி, கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்: ’மழை காலங்களில் இருக்கும் குளிர் வானிலை காரணமாக காய்ச்சல், சளி போன்ற நோய் ஏற்படுவது இயல்பு என எண்ணாமல்.ஆனால் அவற்றை ஆரம்ப காலத்தில் குணப்படுத்த வழிச் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். இல்லை என்றால் இவற்றின் தொடர்ச்சியாக வரும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான தலை வலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் ஆகிய பிற அறிகுறிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட கூடும் என கூறியுள்ளார்.

மேலும் இந்த அறிகுறிகள் ஏற்பட்ட 5 நாட்களில் சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக புள்ளிகள் உடல் முழுவதும் வர தொடங்குவதுடன், பற்கள் மற்றும் உள் உறுப்புகளில் இருந்து இரத்த கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு நிகழும் அறிகுறிகள் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் அல்லது டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என அழைக்கபடும் இது டெங்கு காய்ச்சலின் தீவிரமான நிலையாக கருதப் படுவதாக கூறுகின்றனர் .

பாதிப்பு காரணம்: மேலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த நோயால் பாதிக்கபட்டு இருப்பவர்களுக்கு எளிதில் தீவிர பாதிப்பை அடைய செய்யும் என்கிறார். ஏடிஸ் கொசு பகலில் மட்டும் கடிக்கும் வகையான கொசு என்பதால், பகலில் கொசுக்கள் இடமிருந்து பாதுகாத்து கொள்வது அவசியம் என்கிறார்.

வரும் முன் காப்போம்:மக்கள் தங்களை கொசுக்கள் இடமிருந்து தற்காது கொள்ளவதற்கு முழு உடலை மூடும் வகையில் உடை அணிவது, வெள்ளை நிறத்தில் ஆடை உடுத்துவது, கொசுவிரட்டி ஜெல் பயன்படுத்துவது மூலம் கொசுகளிடம் இருந்து தப்பிக்க முடியும், மேலும் இந்த நோயின் தீவிரம் குழந்தைகள் மத்தியில் அதிகமாக இருப்பதால் பள்ளி,பூங்கா போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொசுகள் கடிகாத படி பாதுகாப்பு அம்சங்களுடன் அனுப்ப வேண்டும் எனவும் குழந்தைகளின் சுற்றுப்புறத்தை சுகாதாரத்துடன் வைத்து கொள்வதன் மூலம் நோய் வராமல் பாதுகாக்கலாம் என்கிறார்.

தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்: டெங்கு தொற்று நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டால் இரண்டு நாட்களுக்குள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதுடன் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தியாவில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப் படாத நிலையில், நோய் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் மருத்துவரின் பரிந்துரைபடி மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் சத்தான நீர் ஆகாரம் சாப்பிடுவதினால் நோய் தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்’ எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"வர்த்தக காரணங்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெறப்படுகிறது"

ABOUT THE AUTHOR

...view details