தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

குடல் புற்றுநோயை தடுக்கும் ஒரு கிளாஸ் பால்..சர்வதேச ஆய்வில் தகவல்! - MILK LOWERS BOWEL CANCER RISK

தினசரி ஒரு கிளாஸ் பால் குடிப்பது குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 17% குறைப்பதாக ஆக்ஸ்வோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels, Getty Images)

By ETV Bharat Health Team

Published : 18 hours ago

உலகில் மூன்றாவது பொதுவான புற்றுநோயான குடல் புற்றநோயின் அபாயத்தை, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பால் குறைப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆயிவில் தெரியவந்துள்ளது. தினசரி பால் குடிக்கும் பழக்கம் உடையவராக நீங்கள் இருந்தால், அதனை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறது.

தினசரி ஒரு கிளாஸ் பால் குடிப்பது, குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 17% குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 97 வகையான உணவு முறைகள் (Diet) மற்றும் அவை குடல் புற்றுநோய் தொடர்பாக ஏற்படுத்தும் தாக்கத்தை, 16 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. 17 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 12, 251 பேர் பங்கேற்றதாக நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communication) இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்சியம் உள்ள உணவுகள் குடல் புற்றுநோய் அபாயத்தை குறைத்ததாகவும், மது போன்ற உணவுகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக, தினசரி உணவில் 300 மில்லிகிராம் கால்சியத்தை சேர்ப்பது (ஒரு பெரிய கிளாஸ் பாலில் காணப்படும் அளவு) குடல் புற்றுநோய் அபாயத்தை 17 சதவீதம் குறைத்துள்ளது என்று ஆய்வு முடிவு செய்துள்ளது.

கீரைகள் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த பல உணவுகளும் ஒரு பாதுகாப்பு விளைவைக் காட்டுகின்றன. இருப்பினும், பால் பொருட்களான சீஸ் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இது போன்ற நன்மையை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோய், குடலில் தொடங்கி பெருங்குடலின் உள் புறத்தில் சில பாலிப்களை (polyps) உருவாக்குகிறது. வழக்கமான ஸ்கிரீனிங் சோதனைகள், பாலிப்களை புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு முன்பு முன்கூட்டிய கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கால்சியம் என்ன செய்கிறது?: கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் ஒரு முக்கியமான கனிமமாகும். மேலும், இதில் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆதாரங்கள் உள்ளன. கால்சியம் குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் என்கிறது ஆய்வு. ஏனெனில் இது பித்த அமிலங்கள் மற்றும் பெருங்குடலில் உள்ள ஃப்ரீ கொழுப்பு அமிலங்களுடன் பிணைய செய்து புற்றுநோய் ஏற்படும் விளைவுகளை குறைக்கிறது.

குடல் புற்றுநோய் அறிகுறிகள்:

  • மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது, அடிக்கடி கழிவறைக்கு செல்வது
  • மலத்தில் இரத்தம் அல்லது ஆசன வாயின் அடிப்பகுதியில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவது
  • திடீரென உடல் எடை குறைவது
  • காரணம் இல்லாமல் உடல் சோர்வு அல்லது மயக்கம் ஏற்படுதல்
  • இந்த அறிகுறிகள் மூன்று வாரத்திற்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

குடல் புற்றுநோய் ஏற்பட காரணம்?: பெரும்பாலும், 50 வயதிற்கும் மேற்பட்ட பெரியவர்களே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும்,

  • பல வகையான புற்றுநோயை ஏற்படுத்தும் புகைபிடிக்கும் பழக்கம் இதற்கும் காரணமாக அமையும். தினமும், ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பது குடல் புற்றுநோய் அபாயத்தை 15% அதிகரிக்கிறது.
  • அதிகப்படியான மரு அருந்துவது
  • உடல் பருமன் அல்லது அதிக எடை
  • சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உட்கொள்வது.

தடுப்பது எப்படி?: குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்க,

  1. நார்ச்சத்து நிறைந்த தானியங்களை உணவில் சேர்ப்பது
  2. பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுதல்
  3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்ப்பது
  4. சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவும்
  5. புகைப்பிடிப்பதை தவிர்ப்பது
  6. உடல் எடையை பராமரிக்கவும்
  7. தவறாமல் உடற்பயிற்சி செய்வது

இதையும் படிங்க:ஆண்டுதோறும் 3 மில்லியன் மக்களுக்கு நீரிழிவை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்...உயிர்க்கொல்லியான சர்க்கரைக்கு மாற்று என்ன?

ABOUT THE AUTHOR

...view details