மனிதனின் உடல் உறுப்புகள் நல்லபடியாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், கல்லீரலில் அதீத கொழுப்பு சேர்வதால் கல்லீரல் கொழுப்பு நோய் என்று சொல்லக்கூடிய Fatty liver பிரச்சனை ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஆரம்ப கட்டங்களில் இந்த பிரச்சனை அறிகுறிகளை காட்டாது என்றாலும், காலப்போக்கில் பல பிரச்சனையை ஏற்படுத்தும். இன்ஸ்டிடியூட் ஆஃப் டயாபெட்டிக்ஸ் அண்ட் டைஜஸ்டிவ் அண்ட் கிட்னி டிசீஸஸ் NAFLD, அதிக எடை கொண்டவர்களில் 75% பேருக்கும், கடுமையான உடல் பருமன் உள்ளவர்களில் 90%க்கும் அதிகமானவர்களுக்கும் Fatty liver இருப்பதாக தெரிவிக்கிறது. கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மோசமான நிலைகளை தடுக்கலாம். கல்லீரல் கொழுப்பு நோயின் 4 முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
- கழுத்தில் கருமை: ஃபேட்டி லிவர், இன்சுலில் சுரப்பை அதிகரிப்பதால், சுரக்கும் அதிக இன்சுலின் ஒன்று திரண்டு கழுத்தில் கருமை திட்டுக்கள் அதாவது, அகந்தோசிஸ் நிக்ரிகன்கஸ் (Acanthosis nigricans) என்ற நிலைக்கு வழிவகுக்கிறது. இது, கழுத்து, அக்குள் மற்றும் உடல் மடிப்புகளில் கருமையை ஏற்படுத்தும்.
- அடிவயிற்றில் வீக்கம்: அடிவயிற்றில் வீக்கம், குறிப்பாக எப்போதும் வயிற்றில் அசெளகரியம் அல்லது உப்புசமான நிலை இருந்தால் ஃபேட்டி லிவர் பிரச்சனையாக இருக்கலாம். கல்லீரில் செயல்பாடு மோசமடைந்தால், வயிற்றுப் பகுதியில் திரவம் படியத் தொடங்கும்.
வயிற்று பகுதியின் வெளிப்புறத்தில் நரம்புகள் தெரிவது மருத்துவ கனவிப்பின் அவசியத்தை குறிக்கிறது. இந்த நிலை ஆஸ்கைட் (Ascites) எனப்படுகிறது. அடிவயிற்றில் வீக்கம், கல்லீரல் தொடர்பான பிரச்சனையின் முக்கிய காரணியாக இருப்பதாகNIH அதன் ஆய்வில் தெரிவித்துள்ளது.
- முகம் மற்றும் பாதங்களில் வீக்கம்: ஃபேட்டி லிவர், உடலில் ஒரு வகையான திரவத்தை தேக்கி வைத்து முகம் மற்றும் பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. எடிமா (Edema) எனப்படும் இந்த நிலை, உடலில் உள்ள திரவங்களின் சரியான சமநிலையை கல்லீரலால் பராமரிக்க முடியாத போது ஏற்படுகிறது.
காரணம் இல்லாமல், முகத்தில் அல்லது காலில் வீக்கம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பதட்டம், அடிக்கடி தாகம், உடல் வெப்பநிலையில் மாற்றம், வயிறு உப்புசமாக இருப்பது கல்லீரல் தொடர்பான பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம் என 2017ல் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
- சருமத்தில் அரிப்பு: சருமத்தில் நாள்பட்ட அரிப்பு , கல்லீரல் தொடர்பான அல்லது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் செயலிழப்பு அல்லது சரியாக வேலை செய்யாத போது, இரத்தத்தில் பித்த உப்புகள் (Bile Salts) படிந்து சருமத்தை எரிச்சலடையச் செய்து அரிப்பை தூண்டுகிறது. காரணம் இல்லாமல், உடலில் நாள்பட்ட அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது.