கல்லீரலை சுத்தப்படுத்துகிறது: உலர் திராட்சை ஊற வைத்த நீர், கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. அதுமட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள நச்சுக்களை உடைத்து வெளியேற்ற உதவும் கல்லீரலில் உள்ள என்சைம்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதிகப்படியான மது அல்லது உணவு உட்கொண்ட பின், ஏற்படும் அசெளகரிகங்களில் இருந்து மீண்டும் வரவும் உதவியாக இருக்கிறது.
சிறந்த செரிமானம்: மலச்சிக்கல் அல்லது வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு உலர் திராட்சை தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கிறது. நார்ச்சத்துக்களால் நிறைந்துள்ள உலர் திராட்சை, குடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கிறது. 2019ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஒரு நாளைக்கு இரண்டு கைப்பிடி உலர் திராட்சைகளை சாப்பிடுவது பெருங்குடல் செயல்பாட்டில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்த நீர் குடிப்பதால், குடல் இயக்கம் மேம்பட்டு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்: உலர் திராட்சை தண்ணீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும், இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நமது தமனிகளை சுத்தமாகவும், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 12 வாரங்களுக்கு தொடர்ந்து உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறைவதாக 2013ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், காலப்போக்கில் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? நீங்க செய்ய வேண்டிய 7 விஷயம் இதான்!
சோர்வை நீக்கும்: இரும்புசத்து குறைபாட்டால், எற்படும் சோர்வை நீக்குகிறது. உலர் திராட்சை இரும்பு சத்தின் களஞ்சியமாக இருக்கிறது. தினசரி காலை உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது, உடலில் இரும்பு சத்தின் அளவை அதிகரித்து இரத்த சோகையை நீக்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
வெயிட் லாஸ்: அதிக ஊட்டச்சத்துக்களும், குறைந்த கலோரிகளை கொண்ட உலர் திராட்சை, தேவையற்ற க்ரேவிங்ஸ்களை குறைக்கிறது. இதில் உள்ள இயற்கையான இனிப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. தொடர்ந்து, உலர் திராட்சை நீர் எடுத்துக்கொண்டவர்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக 2017ம் ஆண்டு NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பளபளப்பான சருமம்: ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ள உலர் திராட்சை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. வயதான தோற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தை பொலிவாக மாற்றுகிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதையும் படிங்க: சர்க்கரை நோய் முதல் சரும பிரச்சனை வரை: இந்த கீரையை மிஸ் பண்ணாதீங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.