சென்னை:ஓடி விளையாடு பாப்பா எனப் பாரதி கூறிய கூற்றுக்கு பின் இத்தனை காரணங்களா? என வியக்க வைக்கும் அறிவியல் பயன்களை ஆராய்ந்து தொகுத்து கொடுத்திருக்கிறது யூனிசெஃப் மற்றும் லெகோ அறக்கட்டளை. ஆம் முந்தைய காலத்தில் ஓடியாடி விளையாடப்பட்ட நொண்டி, பச்ச குதிரை, மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் இன்றைக்கு கைக்குள் அடங்கிய மோபைல் போன் விளையாடுகளாக மாறுவதனால் எத்தனை அறிவியல் நிறைந்த வளர்ச்சியை உங்கள் குழந்தைகள் இழக்கிறார்களா என தெரியுமா. இதுகுறித்து UNICEF தரும் விளையாட்டுகளின் அறிவியல் பின்புலங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
விளையாட்டும் அறிவுத்திறனும்:குழந்தைகளின் முதல் மூன்று ஆண்டுகளில் அடையப்படும் மூளை வளர்ச்சிதான் அவர்களின் சிந்தனை ஆற்றலின் அடிப்படையாக உள்ளது. அப்படிபட்ட பொன்னான காலத்தில் பெற்றோராகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு முதல் ஆசிரியர் மற்றும் முதல் நண்பராக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் சேர்ந்து விளையாடும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
பில்டிங் பிளாக்ஸும் அறிவாற்றலும்:பில்டிங் பிளாக்ஸ் அடுக்கி விளையாடுவதன் மூலம் குழந்தைகள் பொருட்களை கையில் வைத்து உணர்கிறார்கள். தனது மூளையில் காட்சிப்படுத்தி எந்த பகுதி பளாக்ஸ் எங்கு சேரும் என சிந்தித்து பளாக்ஸ்களை பொறுத்துகிறார்கள். இதில் அவர்கள் இடஞ்சார்ந்த புரிதலை கற்று கொள்கிறார்கள். மேலும் உரிய பிளாக்ஸை பொறுத்த முடியாமல் இருக்கும் போது வரும் கோபம் அவர்களுக்குள் விடாமுயற்சி பண்பை வளரச்செய்கிறது, மேலும் பிளாக்ஸ்களை வைத்து உயரமாக அடுக்குவது மனதளவில் உயர்ந்த சிந்தனைக்கு விருப்பம் வரச்செய்கிறது. இது குழந்தைகளின் முகபாவனையை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தருகிறது.
கண்ணாமூச்சியும் மன உறுதியும்: ஒரு பொருளை மறைத்து வைத்துவிட்டு அதை உங்கள் குழந்தைகளைத் தேட விடுங்கள். அப்போது அவர்களின் அறிவாற்றல் வளர்வதுடன் கவனம் செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள். மேலும் ஒரு பொருள் தொலைந்து போகும் போது கையாள வேண்டிய மனப்பக்குவத்தை குழந்தைகள் அடைகின்றனர். அதுமட்டுமின்றி தொலைந்தது மீண்டும் கிடைக்கும் போது அடையும் நிம்மதி அவர்களை, எந்த நேரத்திலும் விரக்தியடையாமல் இருப்பது, எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு தேடும் பண்பு உள்ளவர்களாக வளர செய்கிறது. மேலும் விளையாட்டில் துப்புக் கொடுங்கள் அது அவர்களை புதிய கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.