சென்னை:உலகளவில் பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் காலதாமதம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மருத்துவம் அளிப்பது போல் ஐவிஎஃப்(IVF) சிகிச்சை மையங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், குழந்தையின்மை பிரச்சனைக்கு அனைவருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையில்லை எனவும், திருமணம் முடிந்தப் பின்னர் ஒராண்டு கடந்தப் பின்னரும் குழந்தையின்மை இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் குழந்தைப் பிறக்க வாய்ப்புள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனையின் வரம் ஐவிஎஃப் (Varam IVF) மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர், புறக்கருக்கட்டல் சேவைகள் (IVF) பிரிவை துவக்கியது. இந்த புதிய வரம் ஐ.வி.எஃப் (Varam IVF) மையம், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்பட்ட கருவாக்க, கருவள சிகிச்சைகளையும் மற்றும் பிரத்யேக பராமரிப்பு சேவைகளை வழங்க உள்ளது. இந்த ஐ.வி.எப் மையத்தில் நோயறிதலுக்கான மதிப்பாய்வுகளிலிருந்து கருமுட்டை, விந்து சேமிப்பு வரை சிகிச்சைகளின் முழுத்தொகுப்பை உள்ளடக்கியது.
இந்த மையத்தில்,
- கருப்பை தூண்டல்
- கருப்பையில் கருவூட்டல் (IUI)
- புறக்கருக்கட்டல் (IVF)
- இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ICSI)
- குளிரூட்டுக்கருவி லேசர் உதவியுடன் அடைமுட்டைகள் உள்வைப்புக்கு முந்தைய மரபணு சோதனை (PGT)
- கரு உறையவைத்தல்
- கரு மாற்றுகை
- உறைய வைக்கப்பட்ட கரு மாற்றுகைகள் (FET)
- இளம்கருவளர் பருவ செயல்பாடு
- CGH - ஐ பயன்படுத்தும் கருத்தரித்தல் புராடக்ட்கள் (POC)
- ஆணுறுப்பு சேவைகள்
- மைக்ரோ எபிடிடைமல் விந்தணு ஆஸ்பிரேஷன் (MESA)
- பெர்குடேனியஸ் எபிடிடிமல் ஸ்பெர்ம் ஆஸ்பிரேஷன் (PESA)
- மைக்ரோ டெஸ்டிகுலர் ஸ்பெர்ம் பிரித்தெடுப்பு (Micro-TESE)
- நுண்ணிய ஊசியின் மூலம் உறிஞ்சியெடுத்தல் (FNA)
- ஆண்களுக்கான கருவள சேமிப்பு – விந்தணு உறையவைப்பு (கிரையோபிரெசர்வேஷன்)
- பெண்களுக்கான கருவள சேமிப்பு - புற்றுநோயாளிகளுக்கு தாய்முட்டை உறையவைப்பு ஆகியவை செய்யப்பட உள்ளது.
இதனை, எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இயக்குநர் உர்ஜிதா ராஜகோபாலன் , எம்ஜிஎம் வரம் ஐவிஎஃப் மையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, எம்ஜிஎம் ஹெல்த்கேர் வரம் ஐ.வி.எப் இயக்குநர் தாட்சாயிணி , மகப்பேறு, மகளிர் மருத்துவம் மற்றும் கருவுறுதல் நிபுணர் வனிதா ஸ்ரீ ஆகியோர் கூறும்போது, "மலட்டுத்தன்மை மற்றும் கருவுற இயலாமையின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.
10-15 சதவீதம் தம்பதியரை இது பாதிப்பதால், விரிவான ஐ.வி.எப் சேவைகளுக்கான தேவை முன்பு எப்போதையும் விட இப்போது அதிகரிக்க துவங்கி உள்ளது. தற்காலத்தில் திருமணத்திற்கு பின்னர் ஆண், பெண்கள் அதிகளவில் இரவு நேரங்களில் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் குறிப்பிட்ட நேரம் தூங்காமல் இருப்பதால் குழந்தைப் பேறு உருவாக்கும் ஹார்மோன்கள் உற்பத்தி குறைகிறது.