தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இரத்த உறைகட்டிகளை அகற்றும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி.. தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் அறிமுகம்! - ANGIOPLASTY IN MEENAKSHI MISSION - ANGIOPLASTY IN MEENAKSHI MISSION

LASER ANGIOPLASTY IN MEENAKSHI MISSION: தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாரடைப்புக்கு காரணமாக உள்ள இரத்த உறைகட்டிகளை அகற்றுவதற்கு இந்த சிகிச்சை உதவியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LASER ANGIOPLASTY
LASER ANGIOPLASTY (CREDIT- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Health Team

Published : Aug 23, 2024, 3:14 PM IST

மதுரை:மதுரையில் 350 படுக்கைகளுடன் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தென் தமிழ்நாட்டில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியை அறிமுகம் செய்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிக நவீன மருத்துவ உத்தியைப் பயன்படுத்தி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறைகளை இம்மருத்துவமனை சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு, இரு முதியவர்கள் உட்பட நான்கு இதய நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.

LASER ANGIOPLASTY VIDEO (CREDIT- ETVBharat TamilNadu)

ஆஞ்சியோபிளாஸ்டி சர்ஜரி என்றால் என்ன?ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறைகட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை (அதிக ஆற்றல் உள்ள புறஊதா வெளிச்சத்தை) உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரை பயன்படுத்துகிறது.

இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில்நுட்பமானது, அடைப்புகளைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதுடன் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. குறிப்பாக, சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சிய படிமங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக உள்ளது.

மதுரை மீனாட்சி மிஷன்:இதய நோயாளிகளுக்கு இண்டர்வென்ஷனல் செயல்முறையான லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளை, முதுநிலை இண்டர்வென்ஷனல் இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர்.S.செல்வமணி தலைமையில், இதயவியல் துறைத் தலைவர் டாக்டர்.கணேசன் நம்பிராஜன் உள்ளிட்ட பல மருத்துவர் அடங்கிய இதயவியல் நிபுணர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர்.செல்வமணி கூறியதாவது, "தீவிர மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மார்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும் மற்றும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியமாகும்.

நேரம் செல்லச் செல்ல இரத்த உறைகட்டியின் சுமையும், பாதிப்பும் அதிகமாகிவிடும். இத்தகையச் சூழலில், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி மிகச்சிறப்பாக பயன்படக் கூடியதாகும். ஏனெனில், பெரிய இரத்தக் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு திறன்மிக்க சிகிச்சையை உடனடியாக தொடங்க இது வகை செய்கிறது. இந்த சிகிச்சை முறையை நாங்கள் மேற்கொண்ட நோயாளிகளுள் ஒருவர் தீவிர மாரடைப்புடன் அனுமதிக்கப்பட்டார்.

பெரிய இரத்தக்கட்டிகளுடன், அவரது இரத்தநாளத்தில் 99% அடைப்பு இருந்ததை ஆஞ்சியோகிராம் காட்டியது. வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல், இத்தகைய நபர்களில் குறைந்தது 30% நபர்களுக்கு நாம் விரும்புவதை விட குறைவான சிகிச்சைப் பலன்களையே விளைவிக்கும். ஆகவே, லேசர் சிகிச்சையைப் பயன்படுத்தி அந்த இரத்தக் கட்டிகளை ஆவியாக்கி அகற்றியதால், நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை பலன்கள் உறுதி செய்யப்பட்டன" என்றார்.

அதனைத் தொடர்ந்து, டாக்டர்.ஆர்.சிவக்குமார் பேசுகையில், 'உறைக்கட்டிகளை மிகத்துல்லியமாக இலக்கு வைத்து ஆவியாக்கி அகற்றுவதில் லேசரின் அதிக திறன்மிக்க அடைப்பு அகற்றலை உறுதி செய்கிறது. லேசர் தொழில்நுட்பமானது, உறைக்கட்டிகளை உடைத்து துகளாக்குவதற்குப் பதிலாக, ஆவியாக்கி அகற்றிவிடுவதால் உடைக்கப்படுகின்ற துகள்கள் கீழ்நோக்கிய இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவை விளைவிப்பதற்கான இடர்வாய்ப்பு இல்லை.

லேசரின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகள் இந்த உத்தியின் மிகக் குறைவான ஊடுருவலின் காரணமாக, சிகிச்சைக்குப் பிறகு விரைவாகவே மீண்டு இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிக சௌகரிய உணர்வையும் பெறுகிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

மேலும், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியில் இந்த முத்திரை பதித்த சாதனை நிகழ்வானது, மக்களுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சையை நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி வழங்குவதில் இம்மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு சான்றாகத் திகழ்கிறது என டாக்டர். சம்பத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்க்கரை நல்லதா...கெட்டதா? இனி, சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! - SIDE EFFECTS OF SUGAR

ABOUT THE AUTHOR

...view details