நாம் தினமும் உண்ணும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் நமக்கு ஊட்டமளித்து பலப்படுத்தினாலும், மற்றவை காலப்போக்கில், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மோசமான உணவுத் தேர்வுகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது, முக்கிய உடல் செயல்பாடுகளை சீர்குலைப்பது, சில சமயங்களில் நமது ஆயுட்காலத்தை குறைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், நமது ஆயுட் காலத்தை குறைக்கும் உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சிக்கன் சாசேஜ்களில் (Sausages) செய்யப்பட்ட வகைவகையான உணவுகள் உண்பதற்கு ருசியாக இருந்தாலும், உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். புற்றுநோயின் அபாயத்தை குறிப்பாக, குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகளால் இறைச்சிகள் பதப்படுத்தப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
2010ல் NCBI நடத்தில் ஒரு ஆய்வில், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது, இறப்பு விகிதம், புற்றுநோய் ஆபத்து மற்றும் இதய நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது என கூறுகிறது. இந்த இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது, இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
குளிர்பானங்கள்:சர்க்கரை அளவு அதிகமாக உள்ள பானங்கள் அனைத்தும் உடலில் பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.அதிகப்படியான சர்க்கரை நுகர்வு எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு, மற்றும் டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
2021ல் நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1,84,000 இறப்புகள் ஏற்படுவதாகவும் இதற்கு சர்க்கரை பானங்கள் தான் காரணம் என்கிறது. உங்கள் உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இயற்கையான இனிப்பு பானங்களான இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பிரட், அரிசி: நமது அனைவரது வீடுகளிலும் பிரதானமான உணவாக இருக்கும் அரிசி, பிரட், பாஸ்தா போன்ற உணவுகள் நன்கு சுத்திகரிக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் இன்றி இருக்கிறது. இவை, தயார் செய்யப்படும் தானியங்கள் நன்கு சுத்திகரிக்கப்படுவதால், அதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன.