ETV Bharat / health

6-6-6 நடைபயிற்சி விதி: உங்கள் வாக்கிங்-ஐ எளிமையாக மாற்றும் ஒரே வழி! - 666 WALKING RULE

உங்கள் நடைபயிற்சியை எளிமையாக மாற்றும் 6-6-6 வாக்கிங் ரூல் (666 Walking Rule). எப்படி, எப்போது நடக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - pexels)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 17, 2025, 4:10 PM IST

இன்றைய பரபரப்பான சூழலில், நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்குவது பலருக்கும் முடியாத விஷயமாக இருக்கலாம். இதற்கு காரணம், உடற்பயிற்சி கடினமாகவும், அதை பற்றிய தெளிவான ஐடியா இல்லாததாக கூட இருக்கலாம். ஆனால், இந்த 6-6-6 நடைபயிற்சி விதி தினசரி உடற்பயிற்சியை எளிதாக்கும் என்றால் நம்பமுடிகிறதா?. அந்த வகையில், 6-6-6 நடை விதி என்றால் என்ன? அதை எப்படி பின்பற்றுவது எனபதை பற்றி பார்க்கலாம்.

நடைபயிற்சி இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதாக பல ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 2017ல் Journal of Sports Science and Medicine இதழில் "Walking and cardiovascular health: a systematic review" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வில் நடைபயிற்சி இதய பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்படி, இதயம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைபயிற்சியை இந்த விதிமுறை படி பின்பற்றி பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் ((Credit - GETTY IMAGES))

6-6-6 வாக்கிங் ரூல் என்றால்?: தினமும் காலை அல்லது மாலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நடைபயிற்சிக்கு முன் 6 நிமிடம் வார்ம் அப் செய்துவிட்டு ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) நடக்க வேண்டும்.

நடைபயிற்சி முடிந்த பிறகு, 6 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரே மணி நேரம் தொடர்ந்து நடக்க முடியாதவரகள் அல்லது நேரம் இல்லை எனக்கூறுபவர்கள், அரை மணி நேரமாக பிரித்து காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடைபயிற்சி செய்யலாம்.

இதையும் படிங்க: வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் 'Backwards Walking'..நீங்களும் நடந்து பாருங்க!

நன்மைகள்:

  • நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, மெட்டபாலிசம் சிறப்பாக செயல்படுவதால் நாள் முழுவதும் உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருப்பதாக தி ஹார்ட் ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல,
  • இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு
  • இரத்த ஓட்டம் சீராகும்
  • மேம்படுத்தப்பட்ட மனநிலை மற்றும் மன ஆரோக்கியம்
  • இருதய ஆரோக்கியம்
  • உடல் எடை பராமரிப்பு
  • எழுப்பு ஆரோக்கியம் போன்ற எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? நீங்க செய்ய வேண்டிய 7 விஷயம் இதான்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.