தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இனி சிக்கன் எடுத்தால் ஹைதராபாத் ஸ்டைல் ​​'க்ரீன் சிக்கன் கறி' செய்து பாருங்கள்..செம ருசி! - HYDERABAD GREEN CHICKEN RECIPE - HYDERABAD GREEN CHICKEN RECIPE

HYDERABAD GREEN CHICKEN RECIPE: சிக்கனில் எப்போது வழக்கமான குழப்பு செய்து சலித்து விட்டதா? உங்களுக்காக, இந்த ஹைதராபாத் ஸ்டைல் ​​"க்ரீன் சிக்கன் கறி" ரெசிபியை கொண்டு வந்திருக்கோம்.வீட்டில் செய்து ருசித்து பாருங்கள்!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

By ETV Bharat Health Team

Published : Sep 2, 2024, 5:21 PM IST

ஹைதராபாத்:சிக்கன் என்று மனதில் நினைத்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். அதிலும், சிலருக்கு வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடவில்லை என்றால் உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. வகை வகையாக சிக்கன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வீட்டில் எப்போது சிக்கன் எடுத்தாலும் நமக்கு தெரிந்த ஒரே ஸ்டைலில் தான் சமைத்து சாப்பிடுகிறோம்.

இதற்கு தான் உங்களுக்காக, ஹைதராபாத் ஸ்டைலில் நாவிற்கு ருசியாக இருக்கும் சிக்கன் ரெசிபியை அறிமுகப்படுத்துகிறோம். அதுதான் "ஹைதராபாத் க்ரீன் சிக்கன் கறி". ஒருமுறை இந்த கறியை செய்து சாப்பிட்டு பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டு மழை பொழிவார்கள். இப்போது, வீட்டிலேயே ஹைதராபாத் க்ரீன் சிக்கன் கறியை மிக விரைவாக..மிகச் சுவையாக சமைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1/2 கிலோ
  • வெங்காயம் -2
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • தயிர் - கால் கப்
  • இஞ்சி - 2 துண்டுகள்
  • பூண்டு - 10 பல்
  • முந்திரி - 10
  • கொத்தமல்லி - 1 கப்
  • புதினா - 1 கப்
  • பச்சை மிளகாய் - 12
  • பிரியாணி இலை - 1
  • ஏலக்காய் - 4
  • கிராம்பு - 3
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  • கரம் மசாலா - அர டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு

ஹைதராபாத் க்ரீன் சிக்கன் செய்முறை:

  1. முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  2. இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,கொத்தமல்லி, புதினா,தயிர், மஞ்சள் தூள் மற்றும் முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. பின்னர், அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து நன்கு கலந்து விடவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும். அதன் பின்னர், மேரினேட் செய்த சிக்கனை 20 நிமிடங்களுக்கு தனியாக ஊற வைக்கவும்.
  4. இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின், நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பிறகு, அதில் மேரினேட் செய்த சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது அதில், கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
  6. சிறிது நேரம் கழித்து உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் சிறிது மிளாகாய் பொடி சேர்த்து மூடி வைக்கவும். குறிப்பு: குறைந்த தீயில் சிக்கனை வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான ஹைதராபாத் க்ரீன் சிக்கன் ரெடி!

இந்த ஹைதராபாத் க்ரீன் சிக்கன் கறியை சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அடடா வேற லெவலுங்க..சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..!

இதையும் படிங்க:இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!

ABOUT THE AUTHOR

...view details