நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத்தான் பார்க்கிறார்கள். காரணம் முகத்திற்கு மிக முக்கியமான அம்சமாக இருப்பது கண்கள் தான். ஆனால், சமயத்தில் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம் நம்மை சோர்வாகவும், கவலையில் மூழ்கியிருப்பதாக காட்டுகிறது. கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்பட காரணம் என்ன? அதனை எளிய வழிய முறையை பின்பற்றி எப்படி தடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
- வெள்ளரித் துண்டுகள் கண்களுக்குக் கீழ் உள்ள வீக்கம் மற்றும் கேரி பேக்குகளை குறைப்பதாக 2013 இல் ஜர்னல் ஆஃப் காஸ்மெட்டிக்ஸ், டெர்மட்டாலஜிக்கல் சயின்சஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கண்களை குளிர்ச்சியாக வைக்கவும், வீக்கத்தை குறைக்கவும் வெள்ளரி உதவியாக இருக்கிறது. கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம் குறைய, வெள்ளரிக்காயை மெல்லியதாக வெட்டி 10 முதல் 12 நிமிடங்கள் கண்களில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை 10 முதல் 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கலாம். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி கண்ணுக்கு கீழ் வைப்பதும் நல்ல பலனை தரும்.
- கண்களுக்கு கீழ் குளிர்ச்சியான அல்லது வெதுவெதுப்பான தேநீர் பைகளை சில நிமிடங்களுக்கு வைப்பதால் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தேநீரில் இருக்கும் டேனின்ஸ் இயற்கையாகவே சுருங்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் அளவு கண்ணிற்கு கீழ் நீரை கோர்த்து வீக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, நமது உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு கிராம் உப்பை மட்டும்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
- ஆழ்ந்த மற்றும் சரியான தூக்கம், கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும். இதற்கு, தினசரி 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். அதே போல, தலையணையை சற்று உயராக வைத்துக்கொண்டு தூங்குவது கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
- தூசு, பூஞ்சை போன்றவை ஏற்படுத்தும் அலர்ஜி கண் வீக்கத்திற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. சுகாதாரம் இல்லாத இடங்களுக்கும் அதிக மாசுபாடு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: |