தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

தினம் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் 10 அற்புத பலன்கள் இதோ! - BETEL LEAVES BENEFITS

வெற்றிலை சாறு புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவித்துள்ளது. தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

By ETV Bharat Health Team

Published : 6 hours ago

இந்திய கலாச்சாரத்தில், அதிலும் குறிப்பாக நமது தமிழக கலாச்சாரத்தில் ஆன்மிக பூஜைகள் முதல் இறப்பு வரை அனைத்திலும் வெற்றிலை முதன்மையாக இருக்கிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் வெற்றிலையை மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தது. அப்படி, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு போடும் இந்த வெற்றிலை உங்களது நீண்ட கால பிரச்சனையை நீக்கும் என்றால் நம்ப முடிகிறதா? வெற்றிலையில் இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம் வாங்க.

  • வாரத்திற்கு இரண்டு முறை, 2 டீஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.
  • கர்ப்பிணிகள் வெற்றிலையை மென்று சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும். அதுமட்டுமல்லாமல், பாலூட்டும் தாய்மார்களின் மார்பகங்களில் பால் உறைந்து வலியை ஏற்படுத்தும் போது, வெற்றிலையை லேசாக சூடாக்கி மார்பில் வைத்தால் நிவாரணம் பெறலாம்.
  • வெற்றிலை போடுவதால், ஈறு வலி, ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை நீக்கும். அதுமட்டுமல்லாமல், பற்களை கெட்டியாக பிடிக்க ஈறுகளுக்கு உதவி செய்யும். மேலும், வாய்துர்நாற்றத்தை வெற்றிலை தடுகின்றது.
  • வெற்றிலையில், 3 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் உடல் எடை குறையும். வாரத்திற்கு ஒரு முறை என 2 மாதங்களுக்கு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கோப்புப்படம் (Credit - Getty Images)
  • மூச்சுத்திணறல் மற்றும் இருமல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடுபடுத்தி மார்பில் கட்டினால் தீர்வு கிடைக்கும்.
  • வெற்றிலை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதால், படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வரும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கிறது. இவற்றில் இருக்கும் கிருமி நாசினிகள் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை பாதுகாக்கும்.
  • வெற்றிலையை அளவோடு சாப்பிட்டு வரும் போது, ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும், வெற்றிலை சாற்றுடன் கொஞ்சமாக தண்ணீர் மற்றும் பால் கலந்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும்.
  • செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வெற்றிலை சீராக்குகிறது. இதனால் தான், கல்யாண வீடுகள் மற்றும் விஷேச வீடுகளில் உணவுக்கு பின் வெற்றிலை கொடுக்கிறார்கள்
  • இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரும் ஆற்றலை வெற்றிலை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியே தள்ளும். வெற்றிலை சாறு புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

சொறி சிரங்கு முதல் சிறுநீரக கல் பிரச்சனை வரை..தினமும் 1 செவ்வாழை சாப்பிடுங்கள் போதும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ABOUT THE AUTHOR

...view details