தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் 'Backwards Walking'..நீங்களும் நடந்து பாருங்க! - WALKING BACKWARDS BENEFITS

முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது அதிக கலோரிகளை எரிப்பதாகவும் முதுகில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்னோக்கி நடப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகளை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - Getty images)

By ETV Bharat Health Team

Published : Jan 1, 2025, 3:14 PM IST

உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை நடைபயிற்சி என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. நடைபயிற்சி தரும் நன்மைகளுக்காக அனைவரும் முன்னோக்கி நடப்பதை வழக்கமாக வைத்துள்ள நாம், பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது இல்லை. கடற்கரை அல்லது பார்க்கில் அனைவரும் ஒரு திசையில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒருவர் மட்டும் பின்னோக்கி நடந்து கொண்டிருப்பார்.

வழக்கத்துக்கு மாறாக எதற்கு பின்னோக்கி நடக்கிறார் என வாய்மொழியாக சொல்லி விட்டு அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளாமல் பலரும் கடந்து விடுகிறார்கள். அந்த வகையில், பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

  • முன்னோக்கி நடைபயிற்சி செய்யும் போதும், அதிகமாக பயன்படுத்தப்படாத தசைகள் பின்னோக்கி நடக்கும் போது பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கணுக்கால் தசைகள் மற்றும் இரண்டு தொடை தசைகளான ரெக்டஸ் ஃபெமோரிஸ் மற்றும் வாஸ்டஸ் மெடியலிஸ் பின்னோக்கி நடக்கும் போது கூடுதலாக இயக்கப்படுகிறது.
  • பின்னோக்கி நடக்கும் போது மூளையின் செல்கள் தூண்டப்பட்டு, புதுவிதமான கட்டளைகள் மூளைக்கு பிறப்பிக்கப்படுகிறது. இதனால், தேவையில்லாத விஷயங்களை பற்றி மூளை யோசிக்காமல் இந்த கணத்தில் என்ன நடக்கிறதோ அதை மட்டும் யோசிக்கும். கூடுதலாக, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும். வழக்கமற்ற பணியை செய்வதால் அதிவேகமாக மற்ற வேலைகளை செய்ய தூண்டும்.
கோப்புப்படம் (credit - pexels)
  • முன்னோக்கி நடப்பதை காட்டிலும், பின்னோக்கி நடக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்க நேரிடும் என்பதால் பின்னோக்கி நடக்கும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • மூட்டு வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், பின்னோக்கி நடைபயிற்சி செய்யும் போது அவர்களின் வலி குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்னோக்கி நடக்கும் போது, மூட்டின் மீது தரப்படும் அழுத்தம் குறைந்து தசைகள் நன்கு இயங்க செய்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம் (credit - pexels)
  • முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடக்கும் போது, நரம்பியல் செயல்பாட்டில் வேறுபாடுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். முடிவெடுப்பது மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற அறிவாற்றல் திறன்களுக்குப் பொறுப்பான ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் (Prefrontal Cortex), பின்னோக்கி நடக்கும் போது ஆக்டிவாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

கவனம் தேவை: வீட்டில் அல்லது ஜிம்மில் ட்ரெட்மில் இருந்தால், இருபுறமும் உள்ள பிடியை பிடித்துக்கொண்டு பின்னோக்கி நடக்க முயற்சி செய்யலாம். வெளியிடங்களில் பின்னோக்கி நடப்பவர்கள், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், முதலில் சிறிய தூரம் நடந்து பழகிய பின், தூரத்தை அதிகரித்து கொள்ளலாம். சரியான ஷூக்கள் சமதளமான தரையில் நடக்க வேண்டும். ஆரம்பத்தில் பலரும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால் கவனமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:

சூரிய நமஸ்காரத்தில் இவ்வளவு நன்மைகளா? தினசரி 3 முறை செய்தால் போதும்!

குளிர்காலத்தில் மாலையில் நடப்பது ரொம்ப நல்லதா? காரணத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

முதுகு வலி பிரச்சனையை போக்கும் 3 ஆசனங்கள்..இரவில் தூங்க செல்வதற்கு முன் செய்தால் உடனடி நிவாரணம்!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details