தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மட்டன் பிரியரா நீங்கள்?..சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி! - Mutton Can Cause Diabetes - MUTTON CAN CAUSE DIABETES

Mutton Can Cause Diabetes: நீங்கள் அசைவ பிரியரா? அதிலும், மட்டன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. வாரத்திற்கு 2 முதல் 3 முறை மட்டன் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Sep 18, 2024, 5:00 PM IST

ஹைதராபாத்:ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும் பெரும்பாலானோர் வீட்டு பாத்திரத்தில் சிக்கன், மட்டன்,மீன் என ஏதோ ஒன்றை நம்மால் பார்க்க முடியும். அதுமட்டுமா? விருந்து,பார்ட்டி என எந்த விழாவாக இருந்தாலும் அங்கு அசைவ உணவுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். அதிலும், பெரும்பாலானவர்களுக்கு மட்டன் என்றால் கொள்ளைப் பிரியம் தான்.

அந்த பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களா? ஆம், என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஆட்டிறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வாரத்திற்கு இரண்டு 2 - 3 முறை மட்டன் சாப்பிடுபவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் (CREDIT - GETTY IMAGES)

மட்டன் சாப்பிட்டால் நீரிழிவு?: உண்மையில், ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமாக புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் விளைவாக, பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், மட்டனை அதிகளவில் சாப்பிட்டால் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக ஆட்டிறைச்சியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் (Type 2 Diabetes) வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இது,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?: இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பத்து ஆண்டுகளாக மட்டன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் மூலம், வாரத்திற்கு இரண்டு 2 அல்லது 3 முறை ஏதாவது ஒரு வடிவில் (சூப், வறுவல்/பொறியல், குழப்பு) மட்டனை சாப்பிடுபவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 15% அதிகம் என தெரியவந்துள்ளது.

ஆட்டிறைச்சிக்கு பதிலாக மீன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது (CREDIT - GETTY IMAGES)

முக்கியமாக, ஆட்டிறைச்சியில் உள்ள தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் இயற்கையான இன்சுலின் வெளியீட்டைத் தடுக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், வீட்டில் ஆட்டிறைச்சி சமைத்து சாப்பிடுபவர்களை ஒப்பிடுகையில், பல்வேறு நிறுவனங்கள் பதப்படுத்தி சேமித்து வைத்துள்ள பேக் செய்யப்பட்ட ஆட்டிறைச்சியை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிய வந்துள்ளது.

மாற்று வழி என்ன?:ஆட்டிறைச்சிக்கு பதிலாக, நல்ல கொழுப்பு மற்றும் புரதத்திற்காக மீன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட பிரபல ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர். நிதா ஜி. ஃபோரௌஹி, "அடிக்கடி ஆட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார். உடல் கொழுப்புக்கு இறைச்சி அவசியம், ஆனால் அதை வரம்பிற்கு மேல் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மட்டன் பிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:

சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு.?

சுகர் பேசண்ட்ஸ் லைட்டா மது அருந்தலாமா? எந்த அளவோடு நிறுத்த வேண்டும்? டாக்டர் அட்வைஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details