ETV Bharat / health

டைப் 2 நீரிழிவை ஏற்படுத்தும் கூல்டிரிங்க்ஸ்... உயிர்க்கொல்லியான சர்க்கரைக்கு மாற்று என்ன? - BEST ALTERNATIVES FOR SUGAR

சர்க்கரையின் அளவு அதிகமுள்ள பானங்களின் நுகர்வு உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : 12 hours ago

Updated : 10 hours ago

குளிர் பானங்கள் உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்த பானங்களின் நுகர்வு, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில், 2.2 மில்லியன் டைப் 2 நீரிழிவு நோயாளிகளையும் 1.2 மில்லியன் இதய நோயாளிகளை உருவாக்குவதாக தெரியவந்துள்ளது.

சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் உலகளவில் நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃப்ரீட்மேன் ஸ்கூல் ஆஃப் நியூட்ரிஷன் சயின்ஸ் அண்ட் பாலிசியின் ஆராய்ச்சியாளர்கள்.

184 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட தரவு மற்றும் நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், வளரும் நாடுகளில் குளிர்பானங்களால் ஏற்படும் நோய்களின் ஆபத்து கவலையளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

குளிர்பானங்களின் அதிகமான நுகர்வு, நீரிழிவு மற்றும் இதய நோயிற்கு வழிவகுப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில், சர்க்கரையின் அளவு நிறைந்த பானங்களின் நுகர்வால் கிட்டத்தட்ட 25% சதவிகதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு ஏன் ஏற்படுகிறது?: உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளைப் போலவே சர்க்கரை எளிதில் செரிமானம் அடைகிறது. சர்க்கரை, ரத்தத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இதன் நீண்ட கால நுகர்வு, எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உலகில் ஏற்படும் மரணங்களுக்கு இந்த இரண்டு தான் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவு மருத்துவக் கழகத்தின் ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளரும் இயக்குநருமான டாரியுஷ் மொசாஃபரியன், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த தீங்கு விளைவிக்கும் பானங்களை அதிகம் உட்கொள்கின்றனர் என்கிறார்.

இதையும் படிங்க: வீகன் உணவு முறை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

குளிர்பானங்கள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்:

  • டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கும்
  • இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
  • உடல் எடை அதிகரிப்பு
  • பல் சிதைவு
  • கல்லீரல் பாதிப்பு

சரக்கரைக்கு மாற்றான இனிப்பூட்டிகள்:

ஸ்டீவியா (Stevia): தென் அமெரிக்காவில் வளரும் தாவரமான ஸ்டீவியா ரெபாடியானாவின் (Stevia rebaudiana) இலைகளிலிருந்து பெறப்படும் ஒரு இயற்கை இனிப்பு வகை தான் ஸ்டீவியா. கிளைக்கோசைடுகள்-ஸ்டீவியோசைடு (glycosides—stevioside) மற்றும் ரெபாடியோசைட் ஏ (rebaudioside A) என அறியப்படும் இரண்டு சேர்மங்களில், ஒன்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இதில், கலோரிகள் இல்லாததால் இனிப்பு விரும்பிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

மோங்க் பழம் (Monk Fruit Extract): வெள்ளை சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பாக இருக்கும் மோங்க் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. Siraitia grosvenorii எனும் தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த பழத்தின் சாறில் கலோரிகள் சுத்தமாகவே கிடையாது.

பேரிச்சம்பழம் (Dates): பிரபலமான உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம்பழம், இயற்கை இனிப்பூட்டியாக இருக்கிறது. பேரிச்சம்பழம் பொடி வெள்ளை சர்க்கரையை விட குறைந்த கிளைசீமிக் குறியீடை கொண்டுள்ளது என்பதால் சிறந்த மாற்றாகவும் ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

பனை வெல்லம் (Palm Jaggery): கருப்பட்டு என்றழைக்கப்படு பனை வெல்லம், பனை மரத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதிலுள்ள இயற்கையான இனிப்பு தன்மை, வெள்ளை சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

இதையும் படிங்க: வயிறு கோளாறுகளை தீர்க்கும் சோம்பு..எப்படி, எப்போது சாப்பிடலாம்?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

Last Updated : 10 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.