ETV Bharat / state

ஆறு கண்டங்களில் உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை..முத்தமிழ் செல்வியின் குறிக்கோள் என்ன? - MUTHAMIZH SELVI

உலகில் உள்ள ஆறு கண்டங்களில் மிக உயரமான மலை சிகரங்களை ஏறி தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி சாதனைப் படைத்துள்ளார்.

மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறி  சாதனை படைத்த முத்தமிழ் செல்வி
மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2025, 9:26 PM IST

Updated : Jan 12, 2025, 9:46 PM IST

சென்னை: அண்டார்டிகா கண்டத்தில் மிக உயரமான மலையான மவுண்ட் வில்சன் சிகரத்தில் ஏறி தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி சாதனைப் படைத்துள்ளார். உலகில் உள்ள 7 கண்டங்களில் 6 கண்டங்களில் உள்ள முக உயரமான மலைசிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ள நிலையில், விரைவில் ஏழாவது மலை சிகரத்திலும் ஏறி சாதனை படைப்பேன் என்று முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி(34). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர், விளையாட்டு துறையில்சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிறு வயதில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முத்தமிழ் செல்வி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்:

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மலை சிகரமான, 8,848.86 மீட்டர் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். தொடர்ந்து, குதிரை மீது அமர்ந்துகொண்டு தொடர்ந்து அம்பு ஏய்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறும் முத்தமிழ் செல்வி
மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறும் முத்தமிழ் செல்வி (ETV Bharat Tamil Nadu)

அப்போது, “நான் ஒரு வருடத்திலேயே ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறேன். அப்படி ஒரு வருடத்தில், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்தால், இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் மூன்றாம் இடமும் பெறுவேன்” என்று முத்தமிழ் செல்வி தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது வரை உலகில் உள்ள ஏழு கண்டங்களில் 6 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனைப் படைத்துள்ளார்.

ஏறி சாதனைப் படைத்த மலை சிகரங்கள்:

வ.எண்கண்டங்கள்(Continent)மலை சிகரங்கள்(Mountains)மலைகளின் உயரம் (மீட்டரில்)சாதனை படைத்த ஆண்டுகள்
1ஆசியாஎவரெஸ்ட் (Mount Everest)8,849 மீட்டர்12 பிப்ரவரி 2022
2ஐரோப்பாமவுண்ட் எல்பர்ட் மலை (Mount Elbert)5,642 மீட்டர்21 ஜீலை 2023
3ஆப்பிரிக்கா கிளிமஞ்சாரோ மலை (Mount Kilimanjaro)5,895 மீட்டர்12 செப்டம்பர் 2023
4தென் அமெரிக்காஅகான்காகுவா மலை (Aconcagua)6,962 மீட்டர்23 மே 2023
5ஆஸ்திரேலியா கோசியஸ்கோ மலை (Mount Kosciuszko)2,228 மீட்டர்17 மார்ச் 2024
6அண்டார்டிகாமவுண்ட் வில்சன் (Mount Wilson)4,892 மீட்டர்22 டிசம்பர் 2024

இதன் மூலம், மிக விரைவாக 6 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளை ஏறி சாதனை படைத்த முதல் பெண்ணாக முத்தமிழ் செல்வி திகழ்ந்து வருகிறார். இதையடுத்து, ஏழாவது கண்டமான வட அமெரிக்காவில் உள்ள, 6,144 மீட்டர் உயரமுள்ள தெனாலி மலையை (mount denali) விரைவில் ஏறி சாதனை படைப்பேன் என்றும் அதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதாகவும் முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.

மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறி முத்தமிழ் செல்வி சாதனை
மவுண்ட் வில்சன் மலை சிகரம் ஏறி முத்தமிழ் செல்வி சாதனை (ETV Bharat Tamil Nadu)

படம் பார்த்து மலையேற வந்த ஆசை:

இது குறித்து சாதனைப் பெண்மணி முத்தமிழ் செல்வி ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சிறு வயது முதல் ஏதாவது சாதனைப் படைக்க வேண்டும் என்ற கனவுடன் முயற்சி செய்து வருகிறேன். சிறு வயதில் எனது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எவரெஸ்ட் மலைகளைப் பற்றி விவரித்தார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களிலும் எவரெஸ்ட் மலைகளை பார்த்து அதன் மீது ஏற வேண்டும் என்று ஆசை தோன்றியது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

அதன்படி, இமயமலை உயரத்தை தெரிந்துக்கொண்டு, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தேன். மற்ற விளையாட்டுகளை விட மலை ஏறுதலில் அதிகமான இடையூறுகள் இருக்கும். எனவே, மலை ஏறுதலுக்கு தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தேன். நான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள மலையில் ஏறியும், இறங்கியும் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தேன்.

மலையேற தகுதி:

மேலும், மலை ஏறுபவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? போன்ற விவரங்களை யூடியூப் மூலமாக பார்த்து கற்றுக் கொண்டேன். எவரெஸ்ட் போன்ற அதி உயரமான மலைகளை ஏறுவதற்கு, 5,000 மீட்டர் கொண்ட மலையை ஏறி உயரமான சிகரங்களை ஏறுவதற்கான தகுதியை பெற வேண்டும். அதற்காக நேப்பாளம் பகுதியில் உள்ள லபசா மலையை (Mount Labasa) ஏறி அதற்கான தகுதி சான்றிதழை பெற்றுள்ளேன்.

7 கண்டங்களின் மலைகளை அடைய முயற்சி:

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலைகளை ஏறி சாதனைப் படைத்துள்ளேன். தற்போது, அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமனா மலை சிகரமான மவுண்ட் வில்சன் (Mount Wilson) மலையை ஏறி சாதனை படைத்துள்ளேன். அடுத்தபடியாக ஏழாவது கண்டமான வட அமெரிக்கவில் உள்ள தெனாலி மலை (mount denali) சிகரத்தை, வரும் மே மாதத்தில் ஏற உள்ளேன். அதற்கான முயற்சிகளை தற்போது செய்து வருகிறேன் என்றார்.

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு:

பெண் என்பவர் பலமானவர். குடும்பத்தையும், வேலையையும் பார்த்துக்கொண்டு சாதனை படைக்கும் பெண்ணுக்குள் வீரம் உள்ளது. தமிழ்நாடு அரசு நான்மலைகள் ஏறுவதற்கு தொடர்ந்து உதவிகள் செய்து, ஊக்கம் அளித்து வருகின்றனர். ஏழாவது கண்டத்தில் உள்ள தெனாலி மலையை ஏறி முடித்த பிறகு, என்னைப் போன்று மலை ஏற முயலும் பெண்களுக்கு பயிற்சிகள் அளிப்பேன். விளையாட்டில் ஈடுபடுவதாலும், உடற்பயிற்சி செய்வதாலும் நமது உடல் தாமாக மறுசுழற்சி செய்து கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated : Jan 12, 2025, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.