தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கருப்பு கவுனி...எப்படி சாப்பிடனும்? - KARUPPU KAVUNI FOR SUGAR PATIENTS

கருப்பு கவுனி அரிசியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வரும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கருப்பு கவுனியை சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Nov 8, 2024, 3:55 PM IST

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக விளையக்கூடிய கருப்பு கவுனி அரிசி தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று. இதிலுள்ள சத்துக்களும், அது தரும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இந்தியாவில் இதை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில், பழங்காலத்தில் சீனாவில் இந்த அரிசியை மன்னர்கள் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. சாதரண மக்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. அப்படி, இந்த அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பார்ப்போம் வாங்க..

கருப்பு கவுனியில் உள்ள சத்துக்கள்:புரதம், நார்சத்து,இரும்பு சத்து,வைட்டமின் ஈ, ரிபோப்ளோவின், நியாசின், லுடீன், கால்சியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், ஜியாக்சாண்டின்.

நன்மைகள்:

கொலஸ்ட்ராலை குறைக்கும்:கருப்பு கவுனியில் உள்ள ஆந்தோசயனின் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து, உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக, உடலில் இருக்கக்கூடிய LDL மற்றும் ட்ரைகிளிசரைடு போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து HDL எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்த குழாயில் படியும் கொழுப்புகளை நீக்கி இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

கேன்சர் வராமல் தடுக்கும்: உடலில் புற்றுநோய்களை ஏற்படுத்தும் காரணிகளை அழிப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும். குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும். ஆன்டி கேன்சர் ஃப்ராபர்டிகளாக இது செயல்படுகிறது.

செரிமானம் சீராகும்:100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இதனால், செரிமான சார்ந்த பிரச்சனைகளான வயிறு உப்புசம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

கல்லீரல் சுத்தமாகும்: இதில் இருக்கக்கூடிய அதிக அளவிளான ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி கல்லீரை சுத்தப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், கல்லீரில் உள்ள செல்களை புதுப்பிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு: அரிசி வகைகளில் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரெட் மற்றும் அதிகளவிளான நார்ச்சத்தை கொண்டுள்ளது கருப்பு கவுனி தான். இதை உட்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.

இரத்த சோகை குணமாகும்: உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை நீக்குகிறது. 100 கிராம் கருப்பு கவுனியில் 2.2 கிராம் இரும்புச்சத்து உள்ளது.

வெயிட் லாஸ்: அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள், வாரத்திற்கு 4 முறை இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கக்கூடிய கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்கும்.

எப்படி எடுத்துக்கொள்ளலாம்?:கருப்பு கவுனியை சாப்பிட வேண்டும் என்றால், அதை ஒரு நாள் முன் இரவே தண்ணீரில் நன்கு கழுவி ஊறவைக்க வேண்டும். பின்னர், மறுநாள் காலை அல்லது மதியத்தில் ஒரு கிளாஸ் கவுனி அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 விசில் விட்டு சாப்பிடலாம். கருப்பு கவுனியில் கஞ்சி, கூழ், புலாவ், பிரியாணி,புட்டு, தோசை, இட்லி போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க:

கோதுமை மாவுடன் 'இந்த' மாவை சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள்.. கொழுப்பு தானாக கரையும்!

'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு'..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'கருப்பு உணவுகள்' பட்டியல் இதோ!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details