சென்னை:உலக அளவில் அச்சுறுத்தி வரும் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்யத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கை முறையில் இந்த ஆறு விஷயங்களை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறது லண்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு.
புற்றுநோயைத் தடுக்க முடியுமா?: ஒரு நபருக்கு பல்வேறு காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரோக்கியமான மாற்றங்களால் புற்றுநோயால் வரும் ஆபத்தை குறைக்க முடியுமே தவிர, தடுக்க முடியாது. வயது முதிர்வு மற்றும் ஓருவரின் குடும்ப ஆரோக்கியப் பின்னணியைப் பொறுத்து தனிநபருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
நோ டூ ஸ்மோக்கிங்:புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைத்தால் முதலில் நிறுத்த வேண்டிய பழக்கம் புகைப்பிடித்தல் தான். புகையிலையில் இருக்கும் நச்சுக்கள் நுரையீரலை நேரடியாக பாதிப்பது மட்டுமல்லாமல், மொத்த உடலையும் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பாதிக்கிறது. உங்கள் உடலுக்கு நீங்கள் நல்லது செய்ய நினைத்தால், முதலில் கைவிட வேண்டியது புகைப்பழக்கத்தை தான்.
உடல் எடையில் கவனம்:ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த வாழ்க்கைச் சூழலில் உடல் எடையை பராமரிப்பது கடினமாக இருக்கக்கூடும். இருப்பினும், உணவு முறைகளில் கவனம் செலுத்தி உடல் எடையை பாரமரிக்க வேண்டிய அவசியம் முக்கியமானது.