தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

புற்றுநோயை எதிர்த்து போராடும் வேப்பிலை, துளசி மற்றும் தேன் காம்போ..உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன தெரியுமா? - EATING NEEM TULSI WITH HONEY

வேப்பிலை, துளசி மற்றும் தேனின் நன்மைகள் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இவற்றை தினசரி காலை வெறும் வயிற்றில் ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Health Team

Published : Dec 3, 2024, 12:58 PM IST

  • வேப்பிலை, துளசி மற்றும் தேனின் முழுமையான நன்மைகளுக்காக இவை அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. காலையில் இந்த கலவையை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
  • வேம்பு மற்றும் துளசியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை இருக்கின்றது. தேன் உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எனவே, இவற்றை உட்கொண்டு வரும் போது சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை வரவிடாமல் தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • வேப்பிலை நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும், துளசி கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றும் தேன் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இந்நிலையில், இவை மூன்றையும் சேர்த்து உட்கொண்டால் உடலில் உள்ள நச்சு வெளியேறுவதோடு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. வேம்பு, புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • துளசி செரிமான மண்டலத்தை சீராக்குகிறது, வேப்பிலை குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, மேலும் தேன் குடல் நுண்ணுயிரிகளின் நல்ல சமநிலையை பராமரிக்கிறது. இதன் விளைவாக வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை குறைப்பதோடு ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.
தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
  • நாசியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வேப்பிலை மற்றும் தேன் இயற்கையான மருந்தாக இருக்கிறது. தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும் பண்புகள் தேனில் உள்ளது. இந்த கலவையானது இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவை சமாளித்து சுவாச பாதைகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • வேப்பிலை மற்றும் துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை சரும பிரச்சனைகளான பரு, கரும்புள்ளி, தழும்பு போன்றவற்றை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தேன் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்மற்றும் சருமத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த தேன் உதவுவதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் தெரிவித்துள்ளது.
  • வேப்பிலை இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உடலை சுறுசுறுப்பாக துளசி உதவுவதால், இவற்றை தினசரி காலை எடுத்துக்கொள்ளும் போது, இதய ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கவும் இவை உதவி செய்கிறது.

இதையும் படிங்க:

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

லெமன்..தேன்..வெந்நீர்..டக்குனு சிக்குன்னு மாற இதை செய்யுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details