ஹைதராபாத்: நமது கண்களால் பார்க்க கூடிய இடத்தில் ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் வந்தால்,அதன் தீவிரத்தை பார்த்து அதன் நிலையை மதிப்பிடலாம். ஆனால் கண்களுக்குத் தெரியாத சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைளின் வலியை நம்மால் விவரிக்க கூட முடியாத ஒன்றாகும். மூலம் (Piles) அப்படிப்பட்ட ஒரு பிரச்சனை தான்.
சிலருக்கு, மருந்துகள் எடுத்துக்கொள்வதால் இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியும், இன்னும் சிலருக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கிறது. இந்த இரண்டையும் தவிர வேறு வழிகளே இல்லையா? என்றால் ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வு உள்ளது என்கிறார் பிரபல ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி. வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் பைல்ஸ்-ஐ குறைக்க முடியும் என்கிறார். அப்படி, பைல்ஸ்-ஐ குறைக்க உதவும் ஆயுர்வேத மருந்தை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
தேவையான பொருட்கள்:
- தண்ணீர் - தேவையான அளவு
- அரிசி - 1 கப்
- திப்பிலி தூள் - 1 ஸ்பூன்
- சுக்குத்துள் - 1 ஸ்பூன்
- மோர் - ஒரு டம்ளர்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
- முதலில், அடுப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து, 2 முதல் 3 கப் கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்
- தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், ஒரு கப் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
- அரிசி நன்றாக வெந்ததும் அதில், சுக்கு மற்றும் திப்பிலித்தூளை சேர்க்கவும். இந்த கலவை கஞ்சி பதத்தில் இருக்க வேண்டும்.
- இதையெல்லாம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்
- இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ளதை ஒரு பாத்திரத்தில் எடுத்து மோர் மற்றும் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிடலாம்