தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ரோபோ உதவியுடன் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை! - RRAPN PROCEDURE

அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவர்கள் குழுவினர், நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றாமல் புற்றுநோய் கட்டியை ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினர்
அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினர் (Credit - ETVBharat Tamil Nadu)

By ETV Bharat Health Team

Published : 7 hours ago

சென்னை: வங்கதேசத்தை சேர்ந்த 40 வயது நோயாளியின், சிறுநீரக பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டியை ரோபோ உதவியுடன் அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரகத்தின் முக்கியமான இரத்தநாளங்களுக்கு அருகே 5 செ.மீ. நீள புற்றுக்கட்டி இருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான நோயாளிக்கு இந்த சிக்கலான மருத்துவ செயல்முறை செய்யப்பட்டிருக்கிறது.

பங்களாதேஷில் பல்வேறு மருத்துவமனைகளில் இதற்கு முன்னதாக அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில், புற்றுநோய் கட்டியை அகற்ற சிறுநீரகத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில், சென்னை அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில் சிகிச்சை மேற்கொண்டார்.

நோயாளியை பரிசோதித்த மருத்துவ குழுவினர், சிறுநீரக இரத்த நாள பகுதியில் மிக சிக்கலான இடத்தில் புற்றுநோய் கட்டி இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றாமல், புற்றுநோய் கட்டியை மற்றும் அகற்ற மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினர் (Credit - ETVBharat Tamil Nadu)

அதன்படி, ரோபோ உதவியுடன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர். இந்த சிகிச்சையில் சிறுநீரகம் அகற்றப்படாமல், அதன் இரத்த நாளங்களில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இதையும் படிங்க:மாதவிடாய் வலி: நிவாரணத்திற்கு மாத்திரை எடுத்துக்கொண்டால் ஆபத்தா? மகப்பேறு மருத்துவர் விளக்கம்!

இந்நிலையில், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் துறையின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி பேசுகையில், "சிறுநீரகத்தை அகற்றாமல் தக்கவைக்கும் இம்மருத்துவ செயல்முறை, நோயாளியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கின்ற புதுமையான அணுகுமுறைகளோடு மேம்பட்ட தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.

சிறுநீரகத்தின் சிக்கலான பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டியை, ரோபோடிக் மற்றும் தொழில்நுட்ப யுத்தியை பயன்படுத்தி சிறுநீரகத்தை அகற்றாமல், அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். நோயாளி, நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார்" என்றார்.

தனது அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்ட பங்களாதேஷைச் சேர்ந்த இந்நோயாளி, “எனது சிறுநீரகம் அறுவைசிகிச்சையில் அகற்றப்படலாம் என்பது குறித்தும் மற்றும் மீண்டு குணமடைய நீண்டகாலம் ஆகலாம் என்பதாலும் நான் அதிகம் கவலை கொண்டிருந்தேன். இந்த மேம்பட்ட சிகிச்சை மற்றும் புதிய அணுகுமுறையால் விரைவாக குணமடைந்து எனது தினசரி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:86 வயது மூதாட்டியின் இதயம் காத்த 'Wireless Pacemaker'.. சென்னை மருத்துவர்கள் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details