ETV Bharat / state

சீமானின் பேச்சு பதட்டத்தை உருவாக்குகிறது.. உடனே நடவடிக்கை எடுங்க - கோர்ட் அதிரடி உத்தரவு..! - SEEMAN PERIYAR ISSUE

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சீமான், மதுரை கோர்ட் (கோப்புப்படம்)
சீமான், மதுரை கோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 7:38 PM IST

மதுரை: பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருவதாக சீமான் மீது பெரியார் அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சீமான் மீது மதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்ப்பித்துள்ளது.

மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (09/01/25) செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பெரும் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு

ஆனால், பெண்கள் மத்தியில் தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துக்களை திணிக்கும் வகையில் தொடர்ந்து சீமான் பேசி வருகிறார். அடிப்படை ஆதாரம் இன்றி சீமான் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன.

ஆகவே சீமான் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில், சீமான் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மகேந்திர பதி, பதுருஸ் ஜமான் ஆகியோர், ''சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக பெண்கள் உரிமை, பெண் கல்வி என பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாடு பட்ட தந்தை பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் பேசி வருகிறார். இவர் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதை பதிவு செய்த நீதிபதி, சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் துறை, மனுதாரரின் புகார் மனுவை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.