சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கம்ப்யூட்டர் மூலமாக (CBT) நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் செட் தேர்வை நடத்தப்பட்டு வந்தன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு 2024 ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் செட் தேர்வில் பங்கேற்க சுமார் 96 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
2024 ஜூன் 7 மற்றும் 8 ந் தேதிகளில் செட் தேர்வினை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டது. முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு செட் தேர்வினை கம்ப்யூட்டர் முறையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வினை நடத்துவதற்கு திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தேர்வினை கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடத்த வேண்டும். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்பட வேண்டும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயர்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் செட் தகுதித் தேர்வினை நடத்துவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்து வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடிப் போட்டித் தேர்வு மூலம் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 2024 மார்ச் 14 ந் தேதி முதல் மே 15 ந் தேதி வரையில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏற்கனவே பெற்று வைத்திருக்கிறது.
இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கம்ப்யூட்டர் (CBT) மூலமாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
ETV Bharat / education-and-career
ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு! - SET EXAM ANNOUNCED
ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
![ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு! மாநில தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/1200-675-23542874-thumbnail-16x9--tet-aspera.jpg?imwidth=3840)
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 14, 2025, 3:56 PM IST