மதுரை: ரயில் பயணிகளின் வசதிக்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே eற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக, சென்னை - மதுரை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ''டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (06067) ஜனவரி 11 அன்று சென்னையில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.00 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06068) ஜனவரி 12 அன்று மதுரையில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக டிக்கெட் இல்லையா? 11ஆம் தேதி சென்னை-மதுரை மெமூ ரயில் சேவை!
இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 11 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது'' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.