தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கல்கி 2898 AD முதல் ராயன் வரை... ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடி புது வரவுகள் என்ன? - August OTT releases - AUGUST OTT RELEASES

August OTT releases: கல்கி 2898 AD, ராயன் என இந்த ஆகஸ்ட் மாதம் ஓடிடி தளங்களில் வெளியாகும் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

ராயன், இந்தியன் 2, கல்கி 2898 AD போஸ்டர்கள்
ராயன், இந்தியன் 2, கல்கி 2898 AD போஸ்டர்கள் (Credits - Film posters)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 12:12 PM IST

ஹைதராபாத்: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் பல்வேறு திரைப்ப்டங்கள் வெளியாகி வருகிறது. ஒரு சில சமயங்களில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெறாத படங்கள் கூட ஒடிடி தளங்களில் வெளியான பின்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. எனவே ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தியேட்டர் ரிலீஸ் மட்டுமில்லாமல் ஒடிடி வெளியீடும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் ஒடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கல்கி 2898 AD:நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. புராண அறிவியல் புனைக்கதை உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடி வசூல் செய்தது. இப்படத்தின் ஒடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வரும் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் 'கல்கி 2898 AD' வெளியாகிறது.

ராயன்:சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்த அவரது 50வது திரைப்படம் 'ராயன்'. இப்படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ராயன் படம் வெளியாகி இதுவரை உலக அளவில் 126 கோடியும், இந்திய அளவில் 80 கோடியும் வசூல் செய்துள்ளது. ராயன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2:இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் 2 கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி வசூல் செய்தது. இந்தியன் 2 திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி (நாளை) நெட் ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

டர்போ:வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த மே 23ஆம் தேதி வெளியான திரைப்படம் 'டர்போ' (Turbo). கலவையான விமர்சனங்களை பெற்ற டர்போ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 9ஆம் தேதி), sony liv ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

மனோரதங்கள்:கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி வெப் சீரியஸ் (Anthology web series) 'மனோரதங்கள்' இத்தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்கிறாரா நாக சைதன்யா?... இரு வீட்டினரும் சந்திக்க உள்ளதாக தகவல்! - Naga chaitanya sobhita dhulipala

ABOUT THE AUTHOR

...view details