தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குறி வச்சாச்சு.. ரஜினியின் 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vettaiyan movie release on October - VETTAIYAN MOVIE RELEASE ON OCTOBER

Vettaiyan: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 5:23 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ரஜினிகாந்த். தற்போது ரஜினிகாந்த், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்தது.

தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நேற்று (ஏப்.6) அறிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் படக்குழுவிற்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம்! - Kanguva First Single Release Date

ABOUT THE AUTHOR

...view details