சென்னை: வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் ’Nain mataka’ பாடல் வெளியாகியுள்ளது. கலீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ‘பேபி ஜான்’ (baby john).
இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் அட்லீ ஆப்பிள் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ’தெறி’ படத்தின் ரீமேக்காக பேபி ஜான் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள முதல் பாலிவுட் திரைப்படமாகும். இந்நிலையில் பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் 'Nain mataka' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.