தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சந்திரலேகா படத்தில் முதலில் இவர்தான்.. ஆனால் இறுதியில்.. வனிதா விஜயகுமார் ஓபன் டாக்! - ANTHAGAN SONG RELEASED - ANTHAGAN SONG RELEASED

Anthagan: அந்தகன் பாடல் வெளியீட்டு விழாவில், பிரசாந்த்துக்கு கிடைத்த அப்பா எனக்கு கிடைக்கவில்லை என வனிதா விஜயகுமார் எமோஷனலாக பேசினார்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 6:30 PM IST

சென்னை: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடித்துள்ள படம் அந்தகன். இப்படம் இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் ரிலீஸ் கரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமானது. இந்த நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக், ப்ரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். அந்தகன் படத்தின் பாடல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், பெசன்ட் ரவி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் ப்ரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய வனிதா விஜயகுமார், "இன்று எமோஷனல் நாள். என் கேரியரில் இது ஒரு படம் கிடையாது. இது என் குடும்பம். நான் பள்ளிக் காலத்தில் தான் ஹீரோயினாக வந்தேன். அப்போது ஹீரோன்னா பிரசாந்த் பிடிக்கும். நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

இந்த சில காலங்களில் பிரசாந்த் உடன் அழகான நட்பு கிடைத்தது. அவர் எல்லாத்தையும் அவர் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டார். எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தால் போதும், தியாகராஜன் மனிதர்களை மதிக்க தெரிந்தவர். முதன் முதலில் பார்த்த இளம் ஹீரோ பிரசாந்த். பிறகு பிரபு தேவா. அவரை ரொம்ப பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்பதற்காக சந்திரலேகா படம் ஒகே சொன்னேன். அப்படி நடந்த படம் தான் சந்திரலேகா. கடைசி நேரத்தில் அது விஜயாக (ஹீரோ) மாறிவிட்டது. அடுத்து விஜய், அஜித் நல்ல நண்பர்கள்.

எனக்கு சொல்வதற்கு உரிமை இருப்பதால் சொல்கிறேன். விஜய் கிட்ட நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவீங்க என்று சொன்னேன். அவர் அதை நம்பவில்லை. வாழ்க்கை ஒரு வட்டம். இப்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். பிரசாந்த் மீண்டும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆதி - நிக்கி கல்ராணி குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம்! - Nikki Galrani Darshan At Temple

ABOUT THE AUTHOR

...view details