தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது" சீமான் குறித்து வைரமுத்து பதில்! - VAIRAMUTHU

இன்று நான் சைவம்; அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது என்று சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்துள்ளார்

சீமான், வைரமுத்து
சீமான், வைரமுத்து (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 10:53 PM IST

சென்னை: நான் இன்று சைவம்; அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது என செய்தியாளர்கள் சீமான் குறித்து எழுப்பிய கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்துள்ளார்.

திருக்குறள் உலக பொதுமறை என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், திருக்குறளை எந்தவொரு தனி மதமும் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதனை தொடர்ந்து திருவள்ளுவருக்கு மலர் தூவி, 'திருவள்ளுவர் வாழ்க!' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையாக்கி இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுவதால் இந்த புத்தாண்டு திருவள்ளுவருக்கு பொன்னாண்டு . இந்திய பிரதமர் மோடி அவர்கள் 70 நாடுகள் கூடியிருந்த பேரவையில் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் திருக்குறள் பரப்பப்படும் என்ற அழகான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கு எங்களுடைய வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருக்குறளுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இந்த பெயர்களில் எல்லாம் மிகச்சிறந்த பெயர் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கிற பெயர் உலகப் பொதுமறை என்பது. ஆகையால் உலகப் பொதுமறை என்பதனால் எந்த ஒரு தனி மதமும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏற்றுக்கொண்டு பிரதமர் அறிவிக்க வேண்டும்.

இந்த ஆண்டு கன்னியாகுமரி விழாவில் அறிவித்தேன். ஜனவரி 2 இல் திருக்குறளுக்கு உரை எழுத தொடங்கிவிட்டேன். அந்த உரை நடந்து கொண்டிருக்கிறது. பழமைக்கு பழமையும் புதுமைக்கு புதுமையாகவும் திகழும். உள்ளுக்குள் நுழைந்த பொருளுக்குள் புகுந்து அறிவுக்குள் விரிந்து அது எழுதப்படும். காணாத திருக்குறள் கேளாத திருக்குறள் வாசிக்காத திருக்குறளை இளைஞர்கள் மத்தியில் இந்த உரை சேர்க்கும்." என்று வைரமுத்து நம்பிக்கை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, " இன்று நான் சைவம்; அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆவாது" என்று வைரமுத்து கிண்டலாக பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details