ETV Bharat / state

முன்விரோதத்தால் இருதரப்பு மோதல்; 4 பேருக்கு கத்தி குத்து.. ஒருவர் உயிரிழப்பு - பொங்கலன்று நேர்ந்த சோகம்! - YOUTH MURDER IN RAMNAD

பொங்கல் விழா நேரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 9:14 PM IST

ராமநாதபுரம்: பொங்கல் பண்டிகை அன்று முன்விரோதத்தால் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேருக்கு கத்திக்குத்து மற்றும் ஒருவர் பலியான சம்பவத்தில், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை தெற்கு கரையூர் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அவ்வப்போது திருவிழா போன்ற நாட்களில் இருதரப்பினரும் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரையூர் மாரியம்மன் கோயில் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சனை முத்தியநிலையில், தெற்கு கரையூரை சேர்ந்த சொக்கேஸ்வரன் என்ற நபர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் 35 வயதான நம்புகுமார் என்பவரை பின் தலையில் கீறியுள்ளார். அதனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நம்புகுமார் மயங்கிய நிலையில், மாரியம்மன் கோவில் அருகே கிடந்துள்ளார்.

அப்போது, அவரைக் கண்ட சக நண்பர்கள் அவர் மயக்கத்தில் உள்ளார் என நினைத்து சோதித்துப் பார்த்த பொழுது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததைக் கண்டு, அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகராற்றின்போது கத்திக்குத்து ஏற்பட்டு, சேரன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சேது, சூரியன், ஹரி பிரபாகரன், சூரிய பிரகாஷ் ஆகிய நால்வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்ச மதிப்பிலான 1,200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

இந்நிலையில் உயிரிழந்த நம்புகுமாரின் உறவினர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் ராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட முதல் குற்றவாளியாகக் கருதப்படும் சொக்கேஸ்வரன் அவருடன் உறுதுணையாக இருந்த கார்த்திக் சரண், ரஞ்சித் குமார், கருணாகரன், அயன் சரத்குமார், செல்வராஜ், நம்புசரண், ஆகிய ஏழு பேரையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நம்புகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.