சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோலிவுட் திரையுலகில் வெளியாக உள்ள திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அவற்றைத் தொகுப்பாக இந்த செய்தியில் களில் பார்க்கலாம்.
'ராயன்' படத்தின் முதல் பாடல்:நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள படம் 'ராயன்'. அண்மையில் படத்தில் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை 4 ரிலீஸ் தேதி:இயக்குநர் சுந்தர்.சி தனது அரண்மனை படத்தின் அடுத்த சீரிஸான 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தின் 'அச்சச்சோ' என்ற பாடலையும், படம் இம்மாதம் 26ஆம் வெளியாக உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தியன் 2 புத்தாண்டு வாழ்த்து:இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா மற்றும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன்முறையாக ஷங்கருடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் படக்குழு தெரிவித்துள்ளது.
'ஈரம்' கூட்டணியின் 'சப்தம்' டீஸர்:இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதியின் கூட்டணி ஈரம் படத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது. 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஈரம் படத்தைப் போல வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக இந்த படமும் இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸின் 25வது படம்:ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படமாக 'ஹன்டர்' உருவாகியுள்ளது. வெங்கட் மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'குரங்கு பெடல்' ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி இருக்கு?