தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உதய் கார்த்திக்கின் 'ஃபேமிலி படம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! - family padam movie - FAMILY PADAM MOVIE

Family Padam tamil movie: அறிமுக இயக்குநர் செல்வ குமார் இயக்கத்தில், நடிகர் உதய் கார்த்திக் நடிக்கும் “ஃபேமிலி படம்” என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது.

family padam movie
family padam movie

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 3:37 PM IST

சென்னை:யூ.கே கிரியேஷன் (UK Creations) சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் தொடங்கியது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை, ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக இப்படம் உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், RJ பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். KP நந்து கலை இயக்கம் செய்கிறார். R சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:"என்ட சேட்டன் சேச்சிமாரே" - கேரளாவில் மீண்டும் மாஸ் காட்டிய விஜய்.. வைரலாகும் செஃல்பி வீடியோ! - Actor Vijay

ABOUT THE AUTHOR

...view details