தமிழ்நாடு

tamil nadu

த்ரிஷா நடிப்பில் முதல் வெப் சீரியஸ் 'பிருந்தா' விறுவிறுப்பான டீசர் வெளியீடு! - trisha brindha web series

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:30 AM IST

TRISHA BRINDHA WEB SERIES: சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதல் முறையாக நடித்துள்ள வெப் சீரியஸ் ‘பிருந்தா’ டீசர் வெளியாகியுள்ளது.

பிருந்தா பட போஸ்டர்
பிருந்தா பட போஸ்டர் (Credits - Sony LIV Originals)

சென்னை: பிரபல நடிகை த்ரிஷா நடித்துள்ள வெப் சீரியஸ் ‘பிருந்தா’ டீசர் நேற்று வெளியானது. இது த்ரிஷா நடிப்பில் வெளியாகும் முதல் வெப் சீரியஸாகும். நடிகை த்ரிஷா விஜய்யுடன் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் லியோ. இதனையடுத்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில், ஆடிங் அட்வர்டைசிங் LLP தயாரிப்பில் ‘பிருந்தா’ என்ற இணையத்தொடரில் த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சக்திகாந்த் கார்த்திக் இசையமைத்துள்ள இந்த வெப் தொடருக்கு தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி ஆகியோர் பிருந்தா வெப் சீரியஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிருந்தா வெப் சீரியஸ் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. பிருந்தா வெப் சீரியஸ் Sony LIV ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது.

இந்த வெப் சீரியஸ் குறித்து எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சூர்யா வாங்கலா கூறுகையில், “இந்தத் தொடரை Sony LIV மூலம் இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், பிருந்தா பார்வையாளர்களைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கவும் செய்யும்.

இது ஒரு சக்திவாய்ந்த, பெண் தலைமையிலான கதை, இந்தத் தொடரை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிருந்தாவின் கதாபாத்திரம் கதையின் ஓட்டத்தில் பல மர்மங்களைக் கட்டவிழ்க்கும். திரிஷாவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:30 அடி பிரம்மாண்ட போஸ்டருடன் வெளியான பிக்பாஸ் ராஜுவின் ஃபர்ஸ்ட் லுக்! - Bun butter jam first look

ABOUT THE AUTHOR

...view details