சென்னை : சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்.பாலாஜியை பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்று வரும் தாயின் மகனால் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜி கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதையும், அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றதையும் கண்டிகிறோம். விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் இந்த நிலை ஏன் வரப் போகிறது?
துணை முதலமைச்சர் போடப்பபட்டுள்ளார். நிர்வாக திறன் அதிகரிக்கும் என நினைத்தேன். ஒன்றும் இல்லை. நிர்வாகம் மேலும் சீர்கெட்டுத்தான் போய் உள்ளது. மருத்துவர்களுக்கு எல்லா அரசு மருத்தவமனையிலும் பாதுகாப்பு தர வேண்டும்.
இதையும் படிங்க : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: கிண்டி அரசு மருத்துவமனையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். திமுக அரசு பொது மக்களுக்கு விரோதமாக இருப்பது உயிர்காக்கும் மருத்துவர்களிடம் வந்துள்ளது. அவர் அளித்த சிகிச்சை சரியில்லை என்பது எல்லாம் இல்லை. மருத்துவமனையில் நோய்க்கு என்ன மருந்து அளிக்க வேண்டும் என்பது மருத்துவருக்கு தான் தெரியும்.
அரசாங்கம் முதலில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் ஏன் இந்த நிலை வரப்போகுது. துணை முதலமைச்சர் போட்டுள்ளது எதற்கு? விளையாடுவதற்காக, மருத்துவத்துறை அமைச்சர் என்ன செய்கிறார். மருத்துவமனையில் இந்த பிரச்னை நடந்ததற்கு காரணம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் மட்டுமே காரணமாகும்.
அரசு மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றால் மருத்துவத்துறை அமைச்சர் தான் காரணம். அரசு தான் காரணம். போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் ஒருவர் இறந்த துரதிஷ்டவசமான செயல் நடந்திருக்காது. மருத்துவரை வீட்டில் இருந்தே கொலை செய்ய வேண்டும் என கத்தி எடுத்துக்கொண்டு வந்துள்ளார். மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காக அரிவாள் எடுத்து வெட்டுவீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்