ETV Bharat / state

"விஜய் போலதான் நானும்" - நடிகர் சரத்குமார் பெருமிதம்! - SHBHBFSD

விஜய் சொல்வதுபோல நானும் சினிமாவில் பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்து உச்ச நடிகராக இருந்தபோதுதான் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சரத்குமார், விஜய்
நடிகர்கள் சரத்குமார், விஜய் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 11:00 PM IST

Updated : Nov 16, 2024, 12:35 PM IST

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக முக்கியஸ்தருமான சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், "மன அழுத்தத்தால் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தவறானது. ஆனாலும், விக்னேஷின் தாயார் கூறும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

உதயநிதி துணை முதலமைச்சராக என்ன செய்திருக்கிறார் என்று கூறினால் அவரது செயல்பாடுகளை பற்றி கூறலாம். கலைஞரின் பேரன், முதலமைச்சர் ஸ்டாலின் மகனாக உதயநிதி ஸ்டாலின் வளம் வந்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக விஜய் குறித்த கேள்விக்கு, "விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருவது ஜனநாயக உரிமை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற கட்சிகளை விட விஜய் எவ்வாறு மாறுபட்டு செயல்பட போகிறார் என்பது போகப் போக தான் தெரியும்.

அரசியல் இயக்கமாக விஜய் ஆரம்பித்த பிறகு யாரையாவது தாக்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய, மாநில அரசுகளை விஜய் தாக்கி பேசியுள்ளார். பொது வாழ்க்கை, மக்கள் சேவைக்கு வந்த பிறகு கல்லடி பட தான் செய்யும். அதுதான் இப்போது விஜய்க்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், விஜய் சொல்வதுபோல நானும் சினிமாவில் பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்து உச்ச நடிகராக இருந்தபோதுதான் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன். நான் அரசியல் கட்சி தொடங்கியபோது இரண்டு பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன்" என்று பதிலளித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் திமுக - அதிமுக வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பாஜக தனித்து 11 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவில் கடுமையாக உழைப்பவர்கள் உள்ளார்கள். ஆகவே, தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு எச்.ராஜா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி மறுபடியும் சாத்தியமா என்பது அண்ணாமலைக்கு தான் தெரியும். தேசம் உயர வேண்டும் எனவும் தேசத்திற்காக உழைப்பவர்களும் பாஜகவில் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

அதேபோல, அடுத்தாண்டு ஜூலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலையோடு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துவிட்டேன்.பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற உண்மையாக உழைக்க களத்தில் இறங்க உள்ளேன்" என தெரிவித்தார்.

Last Updated : Nov 16, 2024, 12:35 PM IST

For All Latest Updates

TAGGED:

SHBHBFSD

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.