ETV Bharat / entertainment

'குபேரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது! - KUBERA GLIMPSE VIDEO OUT NOW

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குபேரா க்ளிம்ப்ஸ் வீடியோ போஸ்டர்
குபேரா க்ளிம்ப்ஸ் வீடியோ போஸ்டர் (Credits - @SVCLLP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 10:49 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ்.‌ இவர் நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர் பாடகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் பரவலான வெற்றியை பெற்றுத் தந்தது.

தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இதில், தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குபேரா திரைப்படம் வெளியாகிறது.

இதையும் படிங்க : ஷூட்டிங்கில் பாலத்தில் நின்ற சிவகார்த்திகேயன்; பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்!

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தோற்றம் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. க்ளிம்ஸ் வீடியோ மூலம் படம் எந்த மாதிரியாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.