ETV Bharat / entertainment

ரசிகர்களை தலைவலியுடன் வீட்டுக்கு அனுப்புவதா?... 'கங்குவா' பட இசையை கடுமையாக விமர்சித்த ரசூல் பூக்குட்டி!

Resul pookutty about kanguva: கங்குவா திரைப்பட பின்னணி இசை குறித்து ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கங்குவா போஸ்டர்
கங்குவா போஸ்டர் (Credits - @StudioGreen2 X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

சென்னை: கங்குவா படத்தில் பின்னணி இசை குறித்து பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி விமர்சித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது.

சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. நேற்று கங்குவா திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் கங்குவா படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எரிச்சலூட்டும் விதத்தில் இருந்ததாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். கங்குவா படம் முழுவதும் தேவை இல்லாமல் இரைச்சல் சத்தம் கேட்டு கொண்டே இருந்ததாகவும் ஆடியன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கங்குவா திரைபடத்தின் பின்னணி இசை குறித்து ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி பதிவிட்டுள்ளார். அதில் “ஆடியோ இன்ஜினியராக பணிபுரியும் எனது நண்பர் ஒருவர், எனக்கு கங்குவா பற்றி கிளிப்பிங்கை அனுப்பினார். நமது பிரபலமான படம் ஒன்றில் ஒலி குறித்து இவ்வாறு விமர்சனம் வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: சீன மொழியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம்; போஸ்டருடன் அறிவிப்பு!

இந்த விவகாரத்தில் யாரை குறை சொல்ல முடியும்? சவுண்ட் இன்ஜினியரையா அல்லது கடைசி நேரத்தில் நட்சத்திர நடிகர்களுக்காக பல மாற்றங்களை செய்ய அழுத்தம் கொடுப்பதால் ஏற்படுகிறதா? தியேட்டர்களில் படம் பார்த்து விட்டு செல்லும் ஆடியன்ஸை தலைவலியுடன் அனுப்பினால் எந்த படத்தையும் மறுமுறை பார்க்க வாய்ப்பில்லை” எனப் பதிவிட்டுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் கங்குவா திரைப்படத்தின் பின்னணி இசை குறித்து விமர்சித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.