ETV Bharat / lifestyle

சண்டே ஸ்பெஷல்! மட்டன் எடுத்தா இப்படி சுக்கா செய்ங்க..கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! - HOTEL STYLE MUTTON CHUKKA RECIPE

ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும் காரசாரமான மட்டன் சுக்காவை வீட்டிலேயே ஈஸியா செய்ய இந்த ரெசிபியை ஃபாலோ பண்ணுங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 22, 2025, 12:10 PM IST

அசைவ உணவு பிரியர்கள் மனதில் மட்டனிற்கு என்ற தனியிடம் எப்போதும் இருக்கும். அதுவும், மட்டனில் செய்யப்பட்ட வறுவல், பிரட்டல் என்றால் சொல்லவா வேண்டும்?. மட்டன் சுக்கா பற்றி பேச்சு தொடங்கினாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊற தொடங்கிவிடும். உங்களுக்கும் அப்படிதானா? அப்ப, ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த மட்டன் சுக்கா ரெசிபியை உடனே வீட்டில் செய்து சாப்பிடுங்க..

மட்டன் வேக வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • மட்டன் - 3/4 கிலோ (750 கிராம்)
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 1
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் - 3 டேமிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - 1 கொத்து
  • முந்திரி - 1 கைப்பிடி

மட்டன் சுக்கா செய்முறை:

  • மட்டனை நன்கு கழுவி குக்கரில் சேர்க்கவும். அதனுடன், சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்போது குக்கரில் கறி மூழ்கிற அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி, ஹைய் பிளேமில் 5 விசில் வைத்து எடுக்கவும்.
  • கறி நன்றாக வெந்ததும், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்ததாக, நீட்டமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கியதும், வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து ஹைய் பிளேமில் வதக்கவும்.
  • தண்ணீர் நன்கு வற்றி, சுக்கா பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் வதக்கி கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான மட்டன் சுக்கா ரெடி. இந்த சுக்கா ரெசிபியை ஒரு முறை செய்து பார்த்தால் அடிக்கடி செய்ய தூண்டும். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க.

டிப்ஸ்:

  1. எலும்பு இல்லாத கறியாக வெட்டி வாங்கினால் மட்டன் சுக்கா கூடுதல் சுவையாக இருக்கும். கறியை ரொம்ப பெரிதாகவும், சின்னதாகவும் இல்லாமல் வெட்டி வாங்க வேண்டும்.
  2. மட்டன் சுக்காவிற்கு இந்த மாதிரி இஞ்சி பூண்டு விழுது அரைத்தால் சுவை அட்டகாசமாக வரும்.. அதற்கு, ஒரு கைப்பிடி பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 1 டீஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
  3. கறியில் சேர்க்கப்படும் தயிர் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். தயிர் புளித்து இருந்தால் சுவை நன்றாக இருக்காது.
  4. மட்டன் சுக்கா கடலை எண்ணெயில் செய்தால் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: மூட்டு வலிக்கு தீர்வு தரும் ஆட்டுக்கால் சூப்...இப்படி செய்ங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.