ETV Bharat / entertainment

ஷூட்டிங்கில் பாலத்தில் நின்ற சிவகார்த்திகேயன்; பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்! - SIVAKARTHIKEYAN MOVIE SHOOTING

Sivakarthikeyan movie shooting: பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

ஷூட்டிங்கில் பாலத்தில் நின்ற சிவகார்த்திகேயன்
ஷூட்டிங்கில் பாலத்தில் நின்ற சிவகார்த்திகேயன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 5:25 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'SK23' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பெருங்களத்தூர், வண்டலூர் ஜி எஸ் டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையிலே வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததால் ஜி எஸ் டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஷூட்டிங்கில் பாலத்தில் நின்ற சிவகார்த்திகேயன் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து பெருங்களத்தூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன ஓட்டிகளை அங்கிருந்து அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் நின்று வேடிக்கை பார்ப்பதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களை தலைவலியுடன் வீட்டுக்கு அனுப்புவதா?... 'கங்குவா' பட இசையை கடுமையாக விமர்சித்த ரசூல் பூக்குட்டி!

மேலும் படப்பிடிப்பிற்காக மிகப்பெரிய கிரேன் வாகனம் உள்ளிட்டவைகளும் பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனால் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.