ETV Bharat / entertainment

'கங்குவா' பாத்துட்டீங்களா?... இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா? - TAMIL OTT RELEASES

Tamil OTT releases: கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் குறித்து நிடஹ் செய்தித் தொகுப்பில் காணலாம்

இந்த வார ஓடிடி ரிலீஸ்
இந்த வார ஓடிடி ரிலீஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 4:16 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் சூர்யா நடித்துள்ள ’கங்குவா’ திரைப்படம் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

நயன்தாரா ஆவணப் படம் (Nayanthara: Beyond the Fairy Tale): நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதவித்து வந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பிரபல ஜோடிக்கு உயிர், உலகு என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நயன்தாரா வாழ்க்கை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் 'Nayanthara Beyond the fairy tale' வெளியாகிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பேட்ட ராப்: இயக்குநர் எஸ்ஜே சினு இயக்கத்தில் பிரபு தேவா, வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பேட்ட ராப்’. இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதர்மக் கதைகள்: வெற்றி, அம்மு அபிராமி, சாக்ஷி அகர்வால், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அதர்மக் கதைகள்’. இந்த படம் இன்று Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களை தலைவலியுடன் வீட்டுக்கு அனுப்புவதா?... 'கங்குவா' பட இசையை கடுமையாக விமர்சித்த ரசூல் பூக்குட்டி!

டெட்பூல் அண்ட் வால்வரின் (Deadpool and wolverine): இந்த ஆண்டு ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் டெட்பூஃல் அண்ட் வால்வரின் தான். டெட்பூல் இரண்டு பாகங்களின் வெற்றியை அடுத்து மூன்றாவது பாகம் இது கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதில் டெட்பூஃலுடன் வால்வரின் இணைந்தது ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுத்தது. உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட இப்படம் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வசூல் அள்ளியது. இந்நிலையில் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த 12ஆம் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.