தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

புத்தாண்டு விடுமுறைக்கு நல்ல டைம்பாஸ்... இந்த வாரம் வெளியாகும் தமிழ்ப் படங்கள், வெப் சீரியஸ் என்ன தெரியுமா? - TAMIL THEATRE OTT RELEASE

Tamil theatre OTT release: தமிழில் இந்த வாரம் தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்
இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் (Photo: Film Posters)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 27, 2024, 11:39 AM IST

சென்னை: ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்ப்டங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்த ’விடுதலை 2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஆண்டின் கடைசி வாரமான இன்று (டிச.27) பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நேரத்தில் ஓடிடியிலும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் வெளியாகிறது. இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

அலங்கு: எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. அலங்கு திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். அலங்கு திரைப்படம் இன்று டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திரு.மாணிக்கம்: நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’ இப்படம் இன்று (டிச.27) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ராஜாகிளி: தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’ இப்படம் இன்று (டிச.27) திரையரங்குகளில் வெளியாகிறது.

மேக்ஸ் (Max): கிச்சா சுதீப், சம்யுக்தா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘மேக்ஸ்’. விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் கன்னட மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள், வெப் சீரியஸ்

சொர்க்கவாசல்: சித்தார்த் விஷ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் சொர்க்கவாசல் திரைப்படம் இன்று (டிச.27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஜாலியோ ஜிம்கானா: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி உல்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’ இப்படம் இன்று (டிச.27) ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

ஸ்குவிட் கேம் சீசன் 2: உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த கொரிய தொடரான ஸ்குவிட் கேம் சீசன் 2 (Squid game season 2) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேற்று (டிச.26) வெளியாகியுள்ளது. பெரும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த வெப் சீரியஸில் இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்த வெப் சீரியஸ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details