தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது "ஃப்ரீடம் ஆகஸ்ட் 14" பர்ஸ்ட் லுக்: மாறுபட்ட தோற்றத்தில் அசத்தும் சசிகுமார்..! - Lijomol Jose

Freedom August 14 First Look Poster: இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் "ஃப்ரீடம் ஆகஸ்ட் 14" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

Freedom First Look Poster
வெளியானது "ஃப்ரீடம் ஆகஸ்ட் 14" பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 10:53 PM IST

சென்னை:கிருஷ்ணா, பிந்துமாதவி நடித்த கழுகு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சத்யசிவா. அப்படம் வெற்றி பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சில படங்களை இயக்கிய சத்யசிவா, தற்போது சசிகுமார் நடிப்பில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளனர். திரில்லர் டிராமா திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு "ஃப்ரீடம் ஆகஸ்ட் 14" என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டு விதமாகா வெளியாகி உள்ளது. இதனைப் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டனர்.

அதில் ஒரு போஸ்டரில், கடலுக்கு நடுவே படகில் மக்கள் நிற்க, வெடித்துச் சிதறும் நெருப்பிற்கிடையில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இருக்கும் சசிகுமாரின் லுக் படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது என்றும் இன்னொரு போஸ்டரில் உணர்வுகளை ஆழமாக பிரதிபலிக்கும் சசிகுமார் மற்றும் லிஜோமோல் தோற்றமும் படத்தின் பெயரும் பெரும் சுவாரஸ்யத்தைத் தருவதாக உள்ளதாகவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90-களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார். மேலும், 90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது.

இதுமட்டும் அல்லாது, 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் இப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிக்கா, போஸ்வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்" - ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details