சென்னை: தமிழ்த் திரைப்பட துறையை மறுசீரமைப்பு செய்ய, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்புக்கள் ஆட்சேபனை தெரிவித்து இருந்தன.
இதனையடுத்து, அனைத்து தரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து, தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால், திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.